Published : 15 Aug 2017 07:18 AM
Last Updated : 15 Aug 2017 07:18 AM

பிரதமர் வீட்டு திட்ட பதிவுக்கு அதிக தொகை வசூலிப்பு

பிரதமர் வீடு வழங்கும் திட்டப் பதிவுக்கு இணையதள மையங்கள் அதிக தொகை வசூலிப்பதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகப்பேரைச் சேர்ந்த வாசகர் ஒருவர் ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவை வழியாக கூறியதாவது: ‘‘பிரதமர் வீடு வழங்கும் திட்டத்துக்கு எங்கள் பகுதியில் இருக்கும் இணையதள மையங்களில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான அரசு அறிவித்த சேவைக்கட்டணம் ரூ.28.50 மட்டுமே. ஆனால், சேவைக்கட்டணமாக நபர்களைப் பொறுத்து ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுதொடர்பாக, தமிழக வீட்டு வசதித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,‘‘பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய ரூ.30-க்குள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்குமேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. தனியார் மையங்கள் அதிகளவு பணம் பெற்றதால், பாஜக சார்பில் அந்தந்த பகுதிகளில் முகாம் அமைத்து பதிவுக் கட்டணமாக குறைந்த அளவு கட்டணம் பெற்றுக் கொண்டு பதிவு செய்தனர்.

தற்போது இளைஞர்கள் சிலர் வீடு வீடாகச் சென்று ரூ.30 பதிவுக்கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பதிவு செய்து வருகின்றனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x