Last Updated : 24 Apr, 2017 07:48 AM

 

Published : 24 Apr 2017 07:48 AM
Last Updated : 24 Apr 2017 07:48 AM

அதிமுக அணிகளை இணைப்பதில் அடுக்கடுக்கான சவால்கள்: விட்டுக்கொடுத்தால் மட்டுமே சாத்தியம்

அதிமுகவின் இரு அணிகளை யும் இணைப்பதற்காக, பழனி சாமி அணி சார்பில் மாநிலங் களவை உறுப்பினர் வைத்திலிங் கம் தலைமையிலும், ஓபிஎஸ் அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையிலும் குழு அமைக் கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கு வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், இரு அணிகளின் நிலைப்பாடு மற்றும் இணைப்பில் உள்ள சவால்கள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

பழனிசாமி அணியைப் பொருத்தவரை, முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. பொதுச்செயலாளராக வைத் திலிங்கம் எம்பியை நியமிக்க வேண்டும் அல்லது பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்வரை அவரது தலைமையில் வழிகாட்டு தல் குழு ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர், கட்சியின் பொருளாளர் பதவியை அளிக்கவும், மதுசூதனனுக்கு அவைத் தலைவர், கே.பாண்டிய ராஜன், செம்மலை ஆகியோருக்கு அமைச்சர் பதவி தரவும் தயாராக உள்ளனர். இவற்றுக்கு ஓபிஎஸ் அணி ஒப்புக்கொண்டால் பேச்சு வார்த்தை எளிதில் முடிந்துவிடும் என நினைக்கின்றனர்.

ஆனால், பொதுச் செயலாளர் பதவியை கேட்டுப் பெறுவதில் ஓபிஎஸ் அணி தீவிரம் காட்டு கின்றது. சசிகலா, டி.டி.வி.தினக ரன், வெங்கடேசன் உள்ளிட் டோரை அதிமுகவில் இருந்து நீக்கும் வரை மற்ற நிபந்தனை கள் குறித்து பேசுவதில்லை என ஓபிஎஸ் அணியினர் உறுதியாக உள்ளது. மேலும், கே.பி.முனு சாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு முக்கிய பதவிகளை கேட்டுபெற வேண்டும் என நினைக்கின்றனர்.

இதற்கிடையே, திவாகரன் தரப்பின் தற்போது அமைதியாக இருப்பதுபோல தெரிந்தாலும், சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க முயற்சித் தால் தங்களது ஆதரவு எம்எல்ஏக் கள் மூலம் ஆட்சிக்கே நெருக் கடி கொடுக்கவும் வாய்ப்பு இருக் கிறது. எந்த சூழலிலும் பொறுமை யாகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே இதில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x