Published : 04 Aug 2017 10:01 AM
Last Updated : 04 Aug 2017 10:01 AM

தமிழகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: கோவையில் 54 பேர் உட்பட 125 பேருக்கு மேல் பாதிப்பு - டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 36 பேர் பலி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. கோவையில் 54, ஈரோட்டில் 44 பேர் என தமிழகம் முழுவதும் 125-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் காரணமாக கோவை, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம் மாவட்டத்தில் 36 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல் தற்போது மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவின் எல்லைப்புற மாவட்டங்களான கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களிலும் பரவி வருகிறது.

சென்னையில், ஆயுதப்படை பிரிவு, தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 4 போலீஸார் சமீபத்தில் டெங்கு அறிகுறியுடன் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தேறினர். இந்நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, ஆய்வாளர் லோகேஸ்வரன், காவலர் பரதன், பெண் காவலர் அருள்மணி ஆகியோர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் 30 பேர்

திருச்சி அரசு மருத்துவமனை யில், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல் அறிகுறியுடன் சி்கிச்சை பெறுகின் றனர். நேற்றைய நிலவரப்படி காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 149 பேரில் 7 குழந்தைகள் உட்பட 30 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் யாரும் அபாயக் கட்டத்தில் இல்லை. இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் யாரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழக்கவில்லை என டீன் (பொறுப்பு) அனிதா கூறினார்.

கடலூரில் 4 பேர் டெங்கு காய்ச் சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு இல்லை. திருவாரூர் மாவட்டத் தில் டெங்கு காய்ச்சலால் மன்னார்குடி, முத்துப்பேட்டை பகுதிகளில் பொதுமக்கள் பரவலாக பாதிக் கப்பட்டுள்ளனர். மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையில் அரசு மருத்துவக் குழுவினர் கடந்தவாரம் ஆய்வு நடத்தியபோது 20 பேரில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. .

கோவையில் அதிகம்

கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக பகுதியான கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. டெங்கு பாதிப்பால், கோவை அரசு மருத்துவமனையில் நிஷாந்தினி (4), சாந்தாமணி(46) என்ற பெண்மணியும் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்றுமுன் தினம் அனுமதிக்கப்பட்ட 191 பேரில் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப் பது தெரியவந்தது. நேற்றும் 4 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54 ஆக உயர்ந் துள்ளது. இதுதவிர கோவையில் தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேர் டெங்கு பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்ட எல்லைப் பகுதியான வேப்பந்தட்டை, அரும்பாவூரில் டெங்கு அறிகுறியுடன் பலர் சிகிச்சைக்காக வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

33 பேர் உயிரிழப்பு

சேலத்தில் ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய வட்டாரங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்புகள் பரவலாக காணப்படுகிறது. மர்மக் காய்ச்சலால் இந்த மாவட்டத்தில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக பவானி, அந்தியூர் பெருந்துறை, காஞ்சி கோயில், கவுந்தப்பாடி, ஈரோடு, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் காரணமாக 26 பேர் இறந்துள்ளனர். பவானி மற்றும் அந்தியூர் பகுதி யில் மட்டும் 18 பேர் மர்மக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ஈரோட்டில் 44 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகவும், ஆனால், டெங்கு காய்ச்சலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது. திருவண்ணாமலை, செங்கம் நீப்பத்துறையைச் சேர்ந்த தனஞ்செழியன் மகள் சுஜாதா(10) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு செங்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்று முன்தினம் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

குமரியில் பாதிப்பு

நெல்லையில், பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் 9 பேரும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 10-க்கும் மேற்பட்டோரும், டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், பாதிப்பு அதிகரித்துள்ளது. தக்கலை அரசு மருத்துவ மனையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர் ஆய்வு

நீட் தேர்வுக்காக டெல்லியில் முகாமிட்டிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலை சென்னை வந்தார். அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இதுவரை காய்ச்சல் காரணமாக 85 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்புள்ளவர்கள் 100 சதவீதம் காப்பாற்றப்பட்டுள்ளனர். 750 மருத்துவக் குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 3,500 பேர் களப்பணியில் உள்ளனர். கோவை, சேலத்தில் டெங்கு தாக்கம் அதிகம் உள்ளது. விரைவில் அது கட்டுப்படுத்தப்படும். வெளி நோயாளியை உள்நோயாளியாக வைத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும். குப்பை, நீரை தேவையில்லாமல் தேக்கிவைப்பவர்களுக்கு அபரா தம் விதிக்கப்படுகிறது. எல்லா வகை காய்ச்சலும் டெங்கு அல்ல; எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x