Published : 15 Aug 2017 02:56 PM
Last Updated : 15 Aug 2017 02:56 PM

கடத்துவதற்கு எம்.எல்.ஏ.,க்கள் என்ன குழந்தைகளா?- அமைச்சர் ஜெயக்குமார்

எம்எல்ஏக்களுக்கு கிலுகிலுப் பையை காட்டி இழுக்க டிடிவி தினகரன் முயற்சிக்கிறார். அவர் களின் சின்னச் சின்ன ஆசைகள் நிராசையாக முடியும் என்று அமைச் சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயிலில் நடந்த பொது விருந்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேலூரில் தினகரன் நடத்திய கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற் றுள்ளார்களே? அதிமுக இன்னும் நூறாண்டுக்கு தழைக்க வேண்டும் என்ற கனவை சிதைக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் சதி, துரோகம் செய் தாலும் அவர்கள் தமிழக வரலாற் றில் எட்டப்பர்களாக சித்தரிக்கப் படுவர். அதிமுகவில் உள்ள அண் ணன், தம்பி சச்சரவில் ஆதாயம் தேடலாம்; குறுக்கு வழியில் ஆட்சி யைப் பிடிக்கலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரின் கனவு நனவாகப் போவதில்லை.

எதிரிகள் எண்ணத்துக்கு அதிமுகவினர் நிச்சயம் துணை போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, அச்சம் தேவையில்லை. எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாக தினகரன் குற்றம் சாட்டியுள்ளாரே? எம்எல்ஏக்கள் குழந்தைகள் அல்ல. 25 வயதுக்கு மேற்பட்டவர் கள்தான் எம்எல்ஏக்களாக முடியும். அவர்களை யாராவது கடத்த முடியுமா? சிலர் தங்க ளின் இயலாமையை அடுத்தவர் மீது பழியாக போட்டு ஆதாயம் தேடுகின்றனர். அவர்கள்தான் எம்எல்ஏக்களுக்கு கிலுகிலுப் பையை காட்டி இழுக்க முயற்சித்து வருகின்றனர்.

அவர்களின் சின்னச் சின்ன ஆசைகள் நிராசையாக முடியும். இரு அணிகள் இணைப்புக்கான சூழல் ஏற்பட்டுள்ளதா? அதிமுகவைப் பொறுத்தவரை அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையாக ஆட்சி நடத்த வேண் டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது. கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க பேசி வருகிறோம். அந்தப் பேச்சு செயல்வடிவம் பெற்றுள்ளது. விரைவில் முடிவு எட்டப்படும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே? எந்த சோதனைகளைக் கண்டும் நாங்கள் அஞ்சப் போவதில்லை.

அவர் கொண்டுவந்தால் தமிழக மக்கள் அதை நிராகரிப்பார்கள். ஆனால், அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக கூறியபோது, இங்கிருந்து பிரிந்து சென்ற சிலர் தேவைப்பட்டால் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். அதனால், அதிமுக தொண்டர்கள் நொந்து போயுள்ளனர். அவ்வாறு கூறியவர்களுக்கு காலம் தக்க பாடத்தை உணர்த்தும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

அணிகள் இணைப்பில் ஐயமில்லை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்த பொதுவிருந்தில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், பின்னர் நிருபர் களிடம் கூறியதாவது: அதிமுக அணிகள் இணைப்பில் பாஜக தலையீடு எதுவும் இல்லை. இரு அணிகளும் இணைந்து சிறப்பான முறையில் இந்த ஆட்சி தொடர்ந்து நடக்க வேண் டும் என்பதற்கான அறிவுரைகளை கூறியுள்ளனர்.

பிரதமரை எல்லோ ரும் சந்திப்பது வழக்கமானதுதான். அந்த அடிப்படையில்தான் ஓபிஎஸ் தரப்பினரும் சந்தித்துள்ளனர். அணிகள் இணைப்பு தொடர்பாக இருதரப்பு குழுவினரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மிக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். எனவே, அணிகள் இணைவதில் எந்த ஐயமும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x