Published : 07 Aug 2017 11:20 AM
Last Updated : 07 Aug 2017 11:20 AM

திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையில் கைத்தறி உடை அணிந்து நெசவாளர்களுக்கு உதவுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

வாரத்தில் ஒருநாள் கைத்தறி அல்லது பட்டு ஆடைகளை உடுத்தி நெசவாளர்கள் தரம் உயர உதவ வேண்டும் என பொதுமக்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி வேண்டு கோள் விடுத்துள்ளார்.

தேசிய கைத்தறி தினத்தை யொட்டி அவர் நேற்று வெளி யிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

சுதேசி இயக்கம் கடந்த 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங் கப்பட்டது. இதன் நினைவாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி யில் கைத்தறி தொழில் ஆற்றி வரும் பங்களிப்பு குறித்த விழிப் புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் கைத்தறித் தொழிலை மேம்படுத்தவும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கைத்தறித் தொழில் வளர்ச்சிக் காக முன்னாள் முதல்வர் அண்ணா தனது தோளிலும், தலையிலும் சுமந்து கைத்தறி ஆடைகளை விற்று நெசவாளர்களுக்கு வாழ் வளித்தார். அதேபோல், அண்ணா பிறந்ததினத்தை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை 139 நாட்களுக்கு கைத்தறி துணி விற்பனைக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கும் திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.

தமிழகத்தில் தற்போது 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங் களுக்கும் 3.20 லட்சம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உபதொழில் புரிவோருக்கும் இந்த தொழில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வு வளம் பெற, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து சீரிய முறையில் இந்த அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்கள், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் லூம் வேர்ல்டு விற்பனை நிலையங்களில் விற் கப்படும் பட்டு, கைத்தறி ஆடை களை வாங்கி வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமையில் உடுத்தி நெச வாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்தச் செய்தியில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x