Published : 07 Aug 2017 12:51 PM
Last Updated : 07 Aug 2017 12:51 PM

பாண்டியர் கால மதகை தொடர்ந்து கோவை வேடபட்டி குளத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

கோவை வேடபட்டி குளத்தில் தன் னார்வலர்கள் குழுவினர் ஆய் வில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமையான முதுமக்கள் தாழிகள் ஏராளமானவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கோவையைச் சேர்ந்த தமிழக மரபு சார் தன்னார்வலர்கள் குழு ஒவ்வொரு வாரமும் வரலாற்றுத் தேடல் என்ற நிகழ்ச்சியை ஒருங் கிணைத்து வருகிறது. இக்குழு வில் உள்ளவர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரலாற்று ஆவணங்களை, பழங்கால பொருட்களை கண்டறிந்து ஆய்வு செய்து, அது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பேரூர் அருகே உள்ள வேடபட்டி குளத்தில் நேற்று இக்குழுவினர் நடத்திய ஆய்வில் 15-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கூறும் போது, ‘சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மண்ணால் ஆன முதுமக்கள் தாழிகள் இங்குள்ளன. 15-க்கும் அதிகமான தாழிகள் இருப்பதால், அந்த குளம் ஈமக்காடாக இருந் திருக்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் குளம் தூர்வாருவதற்காக பொக்லைன் மூலம் தோண்டியதில் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் உடைந்து சிதைந்துள்ளன. இது குறித்து முறைப்படி தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆய்வு செய்தால் பேரூர் சுற்று வட்டார நிலப்பரப்புக்கான வரலாறு தெரியவரும்’ என்றார்.

சமீபத்தில் இந்த குளத்தில் தூய்மைப்பணி நடைபெற்றபோது, புதரில் மறைந்திருந்த ஒரு பழங்கால மதகு கண்டறியப்பட்டது. அந்த மதகில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியர் கால மதகாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. இந்நிலையில், முதுமக்கள் தாழிகளும் அங்கு கிடைத்திருப்பதால் அந்த குளத்துக்கு பெரும் வரலாற்று பின்னணி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே இந்த குளம், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x