Published : 09 Aug 2017 08:09 AM
Last Updated : 09 Aug 2017 08:09 AM

ஜிஎஸ்டி வரி குறித்த கோரிக்கையை தேதிக்குள் பரிசீலிக்காவிட்டால் போராட்டம்: 22-ம் வணிகர் சங்கங்கள் அறிவிப்பு

ஜிஎஸ்டி வரி குறித்த வணிகர் களின் கோரிக்கையை 22-ம் தேதிக் குள் பரிசீலிக்காவிட்டால் போராட் டத்தை அறிவிப்போம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து சில பொருட் களுக்கு விலக்கு அளிக்குமாறும். சில பொருட்களுக்கு வரியை குறைக்கும்படியும் வணிகர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் பல்வேறு சங்கங் களைச் சேர்ந்தவர்கள் நேற்று சந் தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு விக்கிர மராஜா, செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாகவும், ஓட்டல்கள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பிலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து தமிழகம் தழுவிய கடையடைப்பை நாங்கள் அறிவித்திருந்தோம். அந்த கடையடைப்பு தொடர்பாக கடந்த ஒரு வாரத்துக்கு முன், முதல்வர் பழனிசாமி எங்களை அழைத்துப்பேசி பல்வேறு கோரிக் கைளை நிறைவேற்றுவதாக உறுதி யளித்தார். இதையடுத்து கடைய டைப்பை வாபஸ் பெற்றோம். அதன் அடிப்படையில், ஒருங்கிணைப்பு குழுவை அழைத்து நன்றி தெரி வித்தார்.

அதே வேளையில் கடலை மிட்டாய், கையால் செய்யப்படும் தீப்பெட்டி மற்றும் பட்டாசுப் பொருட் களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். பல்வேறு துறை சார்ந்த வணிகர் சங்கங்களை அழைத்துச் சென்று, ஜிஎஸ்டி வரியை குறைக்க, பிரத மரை சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அதற்கும் அவர் முயற்சி எடுத்து ஏற்பாடு செய்வோம் என்று உறுதியளித்துள்ளார்.

வரும் 22-ம் தேதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா. ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க தவறினால், நாங்கள் 22-ம் தேதி முதல்கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்பதை தெளிவாக நாங்கள் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலை வர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் தலைமையில், பல்வேறு சங்கங் களைச் சேர்ந்த வியாபாரிகளும் தமிழக முதல்வரை நேற்று சந் தித்து ஜிஎஸ்டி தொடர்பாக விவாதித்தனர். அப்போது ஜிஎஸ்டி சட்டத்தில் பொருட்களுக்கு வரி நிர்ணயிக்கும்போது சில தவறான உதாரணங்கள் பின்பற்றப்பட்டதால் பல பொருட்களுக்கு கடுமையாக வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரி வித்தனர். ஊறுகாய், வெண்ணெய் மற்றும் நெய், பேரீச்சம்பழம், சீனி மிட்டாய், பஜ்ஜி மாவு உள்ளிட்ட 11 பொருட்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்றும், கடலைமிட்டாய், இட்லி, தோசை மாவு, குடிநீர் கேன், ஜவ்வரிசி உள்ளிட்ட 16 பொருட்களுக்கு வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x