Published : 25 Apr 2017 08:15 AM
Last Updated : 25 Apr 2017 08:15 AM

2 நிபந்தனைகளில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ் அணி: அதிமுக அணிகள் இணைப்பில் முட்டுக்கட்டை - மாவட்ட செயலாளர்களுடன் விவாதிக்க முதல்வர் முடிவு

ஓபிஎஸ் அணி தனது நிபந்தனை களில் உறுதியாக இருப்பதால், இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை தொடங்குவதில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள் ளது. இதையடுத்து மாவட்டச் செய லாளர்களை அழைத்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.

அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னத்தை மீட்கும் வகையில் ஓபிஎஸ் சசிகலா அணிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பேச்சுவார்த் தைக்கு தயார் என இரு தரப்பின ரும் அறிவித்தனர். அதே நேரத் தில், முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும், சசிகலா குடும்பத் தினரை கட்சியில் இருந்து நீக்கி அறி விக்க வேண்டும். இந்த நிபந் தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று ஓபிஎஸ் தரப்பில் திட்டவட்டமாக அறி விக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை யில் அமைச்சர்கள் கூடி ஆலோ சனை நடத்தினர். டிடிவி தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்ப தாக அறிவித்தனர். தினகரனும் கட்சியின் நலனுக்காக தானே ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித் தார். ஆனால் தினகரனுடன் அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தொடர் பில் இருப்பதை அறிந்த ஓபிஎஸ் தரப்பு, பழனிசாமி தரப்பினர் தின கரனை ஒதுக்கி வைத்ததாக அறி வித்தது நாடகம் என தெரிவித் தனர். இதனால், இணைப்புப் பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. பழனிசாமி தரப்பில் மாநிலங்களவை எம்பி வைத்திலிங்கம் தலைமையில் ஒரு குழுவும், ஓபிஎஸ் தரப்பில் முன் னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இரு அணிகளும் நேற்று பேச்சுவார்த் தையை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இரு வரும் தங்கள் வீடுகளில் தனித்தனி யாக நேற்று காலை ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே குழு அமைக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும் போது, ‘‘எங்கள் தரப்பில் உள்ள குழுவில் யார், யார் உள்ளனர் என்பதை அறிவிக்கவில்லை. அதுபற்றி முதல்வர்தான் அறிவிக்க வேண்டும். பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார். பேச்சுவார்த்தைக்கு தயா ராக இருக்கும்போது, குழு தொடர் பான அமைச்சரின் இந்தத் தகவல் குழப்பம் ஏற்படுத்துவதாக இருந் தது. பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செய லாளர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப் பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பம், கட்சி யில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற 2 கோரிக்கைகள் எங்கள் தரப் பில் வைக்கப்பட்டன. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி, குழுவை அறிவித்தனர். நாங் களும் குழு அமைத்தோம். உடனடி யாக அவர்கள் அழைப்பார்கள் என காத்திருந்தோம். கடந்த 2 நாட்களும் குழப்பமான நிலையில், ஒவ்வொருவரும் கருத்து கூறுகின்ற னர். இது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. ஒவ்வொருவரும் ஒவ் வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பேச்சுவார்த்தை யில்தான் கருத்துகளை பரிமாற வேண்டும். நமக்குள் இருக்கும் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவர்கள் இவ்வாறு பேசுவது, வேறு யாரோ இவர்களை இயக்குகிறார்கள் என்ற சந்தே கத்தை ஏற்படுத்துகிறது. ஏற் கெனவே வைத்த கோரிக்கைகள் தவிர, வேறு எந்த நிபந்தனை யும் வைக்க நாங்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பழனிசாமி அணியின் குழுத் தலைவர் ஆர்.வைத்திலிங்கமும் நிருபர் களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

இன்று பிரதோஷம். நல்ல நாள். இந்த நல்லநாளில் பேச்சு வார்த்தையை தொடங்கலாம் என நினைத்து ஓபிஎஸ் தரப்பை தொடர்பு கொண்டோம். அவர்கள் தொடர்பு கொள்ளாமல் பேட்டி அளித்துள்ளனர். நிபந்தனை விதித் துள்ளனர். உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு காண முடியும். அதற்கு முன்பே நிபந்தனை விதித்தால் அது பேச்சுவார்த்தைக்கு முட்டுக் கட்டையாக, தவிர்ப்பதற்கு சமமாக இருக்கும். அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.

எங்கள் குழுவில் நான், ஜெயக் குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், அவைத் தலைவர், பொருளாளர் ஆகியோர் இருக் கிறோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அதை செயல்படுத்த நாங்களும் தயாராக உள்ளோம். சசிகலா பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆணையம் அளிக்கும் முடிவுப்படி நாங்கள் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இணைப்பு தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் அணியினர் தங்கள் நிபந்தனைகளில் உறுதியாக இருந்தனர். இதனால், பேச்சு வார்த்தையில் மீண்டும் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் கருத்து மோதல்கள் நடந்து வருவதால் பேச்சுவார்த்தை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

3 நாள் ஆலோசனை கூட்டம்

முதல்வர் பழனிசாமி அணி சார்பில் இன்று முதல் 3 நாட் களுக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இக்கூட்டத்தில், இரு அணிகள் இணைப்பு தொடர் பாகவும், தேர்தல் ஆணையம் கோரியுள்ள கூடுதல் பிரமாணப் பத்திரங்களை சேகரித்து சமர்ப் பிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x