Published : 25 Aug 2017 02:20 PM
Last Updated : 25 Aug 2017 02:20 PM

புதுச்சேரி எம்.எல்.ஏ பாஸ்கரன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு வரவேற்பு

எந்த தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் ஒதுங்கியிருந்த நிலையில் புதுச்சேரி எம்.எல்.ஏ பாஸ்கர் திடீரென சன்வே நட்சத்திர விடுதிக்கு வந்த எம்.எல்.ஏக்களை வரவேற்றார்.

ஓபிஎஸ் , எடப்பாடி அணிகள் இணைந்த பிறகு புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் 4 பேர் எந்த அணியில் உள்ளனர் என்பது பற்றி தெரியாமல் இருந்தது.

அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், ஹசன்னா என 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ளனர். கடலூரில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசிய இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் பெங்களூர் சென்று சிறையில் உள்ள சசிகலாவையும் சந்தித்தனர்.

ஆனாலும் சமீப அரசியல் நிகழ்வுகளில் எந்தப்பக்கம் உள்ளனர் என்று தெரியாமல் நான்கு பேரும் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில் முதலியார் பேட்டை எம்.எல்.ஏ பாஸ்கர் திடீரென தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்தார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் புதுச்சேரியில் விண்ட்பிளவர் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் , இன்று காலை திடீரென அனைவரும் அருகில் உள்ள சன்வே விடுதிக்கு மாறினர். இந்த விடுதி முதலியார் பேட்டையில் உள்ளது இந்த தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாஸ்கர் இன்று காலை திடீரென விடுதிக்கு வந்தார்.

புதிய விடுதிக்கு மாறும் அனைத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் சால்வை அணிவித்தார். இதன் மூலம் புதுவை அதிமுக எம்.எல்.ஏக்கள் தினகரன் தரப்புக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அங்குள்ள அதிமுகவினர் தரப்பில் கருத்து நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x