Published : 22 Aug 2017 13:53 pm

Updated : 22 Aug 2017 13:53 pm

 

Published : 22 Aug 2017 01:53 PM
Last Updated : 22 Aug 2017 01:53 PM

ஆளுநரை சந்தித்தது ஏன்?- தங்க தமிழ்செல்வன் விளக்கம்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆளுநர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:

''ஆட்சியைக் கலைக்க, கட்சியை உடைக்க முயன்றவர் ஓபிஎஸ். அவரிடன் இணைப்பு வேண்டும் என்று எதற்காக அமைச்சர்கள் சென்று கெஞ்ச வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.

அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட எங்களை முதல்வர் ஏமாற்றிவிட்டார். அவரை மாற்ற ஆளுநரிடம் 19 எம்எல்ஏக்களும் தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தோம்.

ஒரு மரியாதைக்குக் கூட அணிகள் இணைப்பு குறித்து எம்எல்ஏக்களாகிய எங்களிடம் கேட்டீர்களா? இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான எங்களை யாரும் அழைக்கவில்லை.

அதிமுக ஓர் ஊழல் அரசு என்றும் அதனை எதிர்த்து ஆகஸ்ட் 15-ல் கோட்டையை நோக்கி உண்ணாவிரதம் எனவும் அறிவித்தவர் ஓபிஎஸ். அவரை ஆட்சியில் கூட்டு சேர்த்தது ஏன்?

இரட்டை இலையை முடக்கியவருக்கு எதற்கு துணை முதல்வர் பதவி அளிக்கவேண்டும்?

சசிகலா கூறியதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்எல்ஏக்களும் வாக்களித்தோம். ஆனால் அதை நினைக்காமல் எங்களை ஏமாற்றிய முதலமைச்சரை மாற்ற வேண்டும்'' என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author