Published : 23 Aug 2017 10:15 AM
Last Updated : 23 Aug 2017 10:15 AM

அசல் ஓட்டுநர் உரிமம் உடன் வைத்திருப்பது செப்.1 முதல் கட்டாயம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் வரும் 1-ம் தேதி முதல் வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைப்பது தொடர்பாக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுபோன்ற ஆலோசனை கூட்டங்களை அடிக்கடி நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதன்காரணமாக முந்தைய ஆண் டைக் காட்டிலும் நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை 3 ஆயிரத்து 244 விபத்துகள் குறைந்திருக்கிறது. 309 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கைகளை பாதி யாக குறைக்க வேண்டும் என்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x