Published : 10 Aug 2017 09:45 AM
Last Updated : 10 Aug 2017 09:45 AM

கள்ளத்தனமாக துப்பாக்கி விற்கும் கும்பல் சென்னையில் சுற்றிவளைத்து 4 பேர் கைது: 7 தோட்டாக்களும் பறிமுதல்

திருவல்லிக்கேணி ஓட்டலில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கள்ளத்தனமாக துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை வாலாஜா சாலை யில் உள்ள ஓர் ஓட்டலில் துப் பாக்கியுடன் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய் வுப் பிரிவு காவல் துணை கண் காணிப்பாளர் அஸ்லாம், ஆய் வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவில் ஓட்டலை சுற்றி வளைத்தனர். பின்னர், சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கியிருந்த அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அறைக்குள் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு துப்பாக்கியும், 7 தோட்டாக்களும் சிக்கின.

பிடிபட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த முருகன் (52), வியாசர்பாடியைச் சேர்ந்த கோபிநாத் (25), மதுராந்தகத்தைச் சேர்ந்த குமார் (50) மற்றும் பிரகாஷ் (32) என்பது தெரியவந்தது. அவர் களிடம் இருந்து 9 எம்எம் பிஸ்டல் ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. ஒரு நபரை ஒரே தோட்டாவால் கொல்லும் சக்தி இந்த துப்பாக்கிக்கு உள்ளது. ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் இந்த துப்பாக்கி விற்பனை செய்யப்படுகிறது.

பிடிபட்ட 4 பேரையும் திருவல் லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், துப்பாக்கியை விற்பனை செய் வதற்காக வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையில் இருந்து கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி, அதை சென்னையில் விற்றுள்ளதும் தெரியவந்தது. சென்னையில் பல ரவுடிகள் மற்றும் வசதி படைத்த பலர் இவர்களிடம் துப்பாக்கி வாங்கியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் கடந்த மாதம் விக்னேஷ் என்ற ரவுடியை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கியை விற்பனை செய்ததும் இந்த கும்பல்தான் என்பது தெரியவந்துள்ளது.

4 பேரும் வைத்திருந்த செல் போன்களையும் பறிமுதல் செய்து அதிலிருந்த தகவல்கள் மற்றும் அவர்களுடன் பேசியவர்கள் குறித்தும் தனியாக ஒரு போலீஸ் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x