கால் பந்தாட்ட பயிற்சிக்கு வந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் மெரினா கடலில் மூழ்கி பலி: 7 மாதத்தில் 23 பேர் உயிரிழப்பு

கால் பந்தாட்ட பயிற்சிக்கு வந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் மெரினா கடலில் மூழ்கி பலி: 7 மாதத்தில் 23 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மெரினா கடலில் குளித்த 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளி மாணவர்கள் 11 பேர் நேற்று காலை மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்களுடன் உடற்பயிற்சி ஆசிரியரும் வந்திருந்தார். கடற்கரை மணலில் மாணவர் கள் கால் பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்ததும் மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, உடற்பயிற்சி ஆசிரியர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

அப்போது, 10-ம் வகுப்பு மாணவர்களான கிஷோர், தீபக், சந்தோஷ் ஆகிய 3 பேர் மட்டும் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே உள்ள கடல் பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அலையின் சீற்றம் காரணமாக 3 பேரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். அதில் சந்தோஷை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். மற்ற 2 மாணவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் கிஷோர், தீபக் இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின. தகவல் அறிந்து வந்த பெற்றோர் மகன்களின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இரு வரின் உடல்களையும் மெரினா போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

அபாயகரமான மெரினா

மெரினா கடலில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். கடற்கரை சாய்வாக இருப்ப தால் கடலுக்குள் செல்லும் போது கொஞ்சம் கொஞ்ச மாகத்தான் ஆழம் அதிகரிக்கும் என்று நினைப்பது தவறு. கடலுக்குள் ஓரிரு மீட்டர் மட்டுமே நடந்து செல்ல முடியும். அடுத்த சில மீட்டரில் 100 அடிக்குமேல் ஆழமான பகுதியாக இருக்கும். அலை யின் வேகத்தாலும், ஆழமான பகுதியாக இருப்பதாலும் உடனடியாக நீரில் மூழ்கி விடுவார்கள். இதை அறியாமல் பலர் கடலுக்குள் இறங்கி உயிரை விடுகின்றனர்.

மெரினா கடற்கரையின் மணல் மேடுகளில் தினந் தோறும் மாற்றம் உண்டாகும். இதேபோலவே கடலுக்கு உள்ளேயும் மணல் பரப்பில் மாற்றம் உண்டாகும். இதனால், இன்று ஆழம் இல்லாமல் இருக்கும் பகுதி, நாளை ஆழமானதாக இருக்கும். ஆறு, குளங்கள்போல கடலில் நீச்சல் அடிக்க முடியாது. அலையின் போக்குக்கு ஏற்றார்போல செயல்படாவிட்டால், உயிரி ழக்க நேரிடும். மெரினா கடலில் குளிப்பது ஆபத்தானது என்று 2 இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள் ளன. ஆனால், அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in