Published : 23 Aug 2017 04:00 PM
Last Updated : 23 Aug 2017 04:00 PM

முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் தலையிடக் கூடாது: இந்திய தேசிய லீக் கருத்து

உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் தலையிடக்கூடாது என இந்திய தேசிய லீக் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

முத்தலாக் விவகாரத்தில் 6 மாதத்துக்குள் புதிய சட்டம் கொண்டுவர நாடாளுமன்றம் பரிந்துரைத்திருப்பது விநோத மானதும், மத சுதந்திரத்துக்கு துரதிஷ்டவசமானதுமாகும். உலக அளவில் நான்கில் ஒருபங்கு மக்களால் பின்பற்றப்படும் மதத்துக்கான சட்டத்தை ஒரு நாடாளுமன்றம் எப்படி இயற்ற முடியும்?. இது மத விவகாரத்தில் தலையிடுவது போன்றதாகும். இன்றைய பாஜக அரசின்மீது அனைத்து சிறுபான்மை மக்களும் நம்பிக்கை இழந்தும், பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் உச்ச நீதிமன்றத்தின் இப்பரிந்துரையால் சிறுபான்மை மக்கள் மேலும் ஒடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஆகவே, இப்பிரச்சினையில் நாடாளுமன்றம் தலையிடுவதை விடுத்து முஸ்லிம்களிடமே இப்பிரச்சினையை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x