Last Updated : 11 Nov, 2014 10:48 AM

 

Published : 11 Nov 2014 10:48 AM
Last Updated : 11 Nov 2014 10:48 AM

அதிக அழுத்தம்.. தாழ்வு மனப்பான்மை.. காதல் தோல்வி..: அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலை

தேசிய அளவில் முதலிடத்தில் தமிழகம்; நகரங்களில் சென்னைக்கு முதலிடம்

இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் சமீபகால மாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும் பாலோர் கல்லூரி மாணவர்கள். கடந்த ஆண்டு தேசிய அளவில் எடுக் கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

சென்னை குரோம் பேட்டை அண்ணா பல்கலைக் கழகத்தில் (எம்.ஐ.டி) கடந்த ஆண்டு நடந்த வளாகத் தேர்வில் ஒரு மாணவரை ஆண்டுக்கு ரூ.21 லட்சம் சம்பளத்தில் கூகுள் நிறு வனம் வேலைக்கு தேர்வு செய்தது. மேலும் 6 மாணவர்கள் ரூ.15 லட்சம் சம்பளத்துக்கு வெவ் வேறு நிறுவனங்களால் தேர்ந்தெடுக் கப்பட்டனர். ஆனால், ஷகீல் அகமது என்ற இறுதியாண்டு மாண வரை எந்த நிறுவனமும் வேலைக்கு எடுக்காததால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவையில் பிரபலமான பொறி யியல் கல்லூரியில் ஜிதேந்திரா சிங் என்ற மாணவர் ஒரு பாடத் தில் பெயில் ஆனதால் நிர்வாகம் அவருக்கு ரூ.6 ஆயிரம் அபராதக் கட்டணம் விதித்துள்ளது. இத னால் அவமானம் அடைந்த மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஜனவரியில் சென்னை ஐ.ஐ.டி மாணவர் செல்வகுமார், வளாகத் தேர்வில் ஆங்கிலத்தில் பேச முடிய வில்லை என்பதற்காக விஷம் குடித்து இறந்தார். நானோ டெக் னாலஜி படித்த நகுல், கடைசி செமஸ்டரில் தோல்வி அடைந்த தால் வளாகத்தேர்வில் கலந்து கொள்ள முடியாதோ என்ற பதற் றத்தில் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்று லாரியில் மோதி இறந்து விட்டார்.

ஒரு லட்சம் தற்கொலைகளில் 11,200 பேர் கல்லூரி மாணவர்கள் என்று தற்கொலை குறித்து ஆய்வு நடத்தி வரும் ‘சூசைட் ஆர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளாகத் தேர்வில் செலக்ட் ஆக வேண்டும் என்று பெற் றோரும், ஆசிரியர்களும் கொடுக் கும் அதிகப்படியான அழுத்தம், சராசரி மாணவரை சென்டம் எடுக்கச் சொல்லி நிர்வாகம் கொடுக் கும் அழுத்தம், பெயிலாகும் மாண வர்களிடம் அபராத கட்டணம் வசூ லிப்பது, ஆங்கிலம் பேசத் தெரியாத வர்களை இழிவாக நடத்துவது, காதல் தோல்வி ஆகிய காரணங்கள் தான் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்க காரணம். தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் இந்த வகையில் 61 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது சூசைட் ஆர்க் நிறுவனம்.

இதுகுறித்து அண்ணா பல் கலைக்கழக பேராசிரியர் செல்லத் துரை கூறும்போது, ‘‘மாணவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற் கென்றே தனியாக நல மையம் உள்ளது. பிரபல நிபுணர்கள் மூலம் ‘மைண்ட் பவர்’ என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதில் அட்வைஸ் இல்லாமல் யதார்த்தமாக பேசி மாணவர்களின் மனதில் உள்ள வற்றை நிபுணர்கள் வெளிக் கொண்டுவருவர். என்எஸ்எஸ், என்சிசி போன்ற ஏதாவது ஒரு அமைப்பில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த அமைப்புகள் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்படுகிறது’’ என்றார்.

இந்தியாவில் கடந்த ஆண்டில் 1,35,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் அதிக தற்கொலைகள் நடந்த மாநிலங் களின் பட்டியலில் தமிழகம் முத லிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் 16,927 பேரும், மகாராஷ்டிரத்தில் 16,112 பேரும், மேற்கு வங்கத்தில் 14,631 பேரும், ஆந்திராவில் 14,328 பேரும் தற்கொலை செய்துள்ளனர். கடைசி இடத்தில் லட்சத்தீவு உள்ளது. இங்கு கடந்த ஆண்டில் ஒரே ஒருவர் மட்டுமே தற்கொலை செய்திருக்கிறார். நகரங்கள் அளவில் நடந்த கணக்கெடுப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு 2,183 பேரும் டெல்லியில் 1,899 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை

தற்கொலை தடுப்புக்காக பாடுபடும் தொண்டு நிறுவனமான ‘சிநேகா’ அதிகாரி சங்கர் கூறும்போது, ‘‘அதிக மதிப்பெண்ணும், படிப்பும் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவது கல்வி நிறுவனங்களின் கடமை. உணர்ச்சிபூர்வமான பிரச்சினைகள் மட்டுமே தற்கொலைக்கு முதல் காரணம். படிப்புடன் கூடிய வாழ்க்கை கல்வியையும், சின்னச் சின்ன பிரச்சினைகளை சமாளிக்கவும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 044 - 24640050 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் பேசலாம். இது முற்றிலும் இலவச சேவை. பேசுபவரின் பெயர் விவரங்களைக்கூட தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x