

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 24 பேரின் நீதிமன்றக் காவல் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவ டைந்ததையடுத்து, மீனவர் கள் 24 பேரும் ஊர்க் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர்.
அப்போது, அவர்களது காவலை வருகிற 21-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தர விட்டார்.
தமிழக மீனவர்களின் காவல் 4-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இதையடுத்து, தமிழக மீன வர்கள் அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக் கப்பட்டனர்