

தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங் களில் கன மழை பெய்து வருகிறது. இது மேலும் 24 மணி நேரத்துக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 11 செ.மீ, ராமநாத புரத்தில் 9 செ.மீ, பாபநாசம், ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 6 செ.மீ, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, சேரன் மகாதேவி ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. இந்திய பெருங்கடலில் உரு வான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், வட கிழக்கு பருவ மழை காரணமாக தென் மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் பிற இடங்களில் பரவலாக மழை பெய்யும்.