அதிமுக அம்மா கட்சி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு சிறப்பாக கொண்டாட திட்டம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

அதிமுக அம்மா கட்சி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு சிறப்பாக கொண்டாட திட்டம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
Updated on
1 min read

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மாவட்டம், வட்டம், பகுதி வாரியாக ஓராண்டுக்கு சிறப்பாக நடத்துவது என்று அதிமுக அம்மா கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக இரு அணிகள் இணைப்புக்கான பேச்சு வார்த்தைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் அதற்கான எவ்வித பணிகளும் இதுவரை தொடங்க படவில்லை. இதற்கிடையே, முதல்வர் கே.பழனிசாமி தரப்பில் உள்ள எம்எல்ஏக்களில் சிலர் அமைச்சரவையிலும் கட்சியிலும் பதவி கேட்டு தனித்தனி குழுவாக செயல்பட்டு வருகின்றனர். முதல்வர் பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டு வருகின்றனர். மேலும், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலை யில், அதிமுக அம்மா கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலு வலகத்தில் நேற்று மாலை நடந் தது. அவைத் தலைவரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட் டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற் றனர். கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாலை 4 மணி முதலே மாவட் டச் செயலாளர்கள் கட்சி அலுவல கத்துக்கு வரத் தொடங்கினர். மாலை 5 மணிக்கு லேசான மழை பெய்த நிலையில், முதல்வர் கே.பழனிசாமி 5.30 மணிக்கு வந்தார். 5.40 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டம் 6.35 மணிக்கு முடிவடைந்தது.

கூட்டத்துக்குப் பிறகு நிருபர் களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம், வட்டம், ஒன்றியம் வாரியாக விழாவை சிறப்பாக நடத்துவதற் கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரமாணப் பத்திரங்களை பொறுத்தவரை நாங்கள் இதுவரை 2 லட்சம் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளோம். 98 சதவீத பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை விரைவில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, பிரமாணப் பத்திரம் தவிர அமைச்சரவை, கட்சியில் சிலருக்கு பிரதிநிதித்துவம் வழங்குதல், அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டதாக அதிமுக அம்மா அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in