Published : 24 Aug 2017 10:09 AM
Last Updated : 24 Aug 2017 10:09 AM

கோவை – கிருஷ்ணராஜபுரத்துக்கு சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

கோயம்புத்தூரில் இருந்து கிருஷ்ணராஜபுரத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூரில் இருந்து செப்டம்பர் 5-ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06060) மறுநாள் காலை 4 மணிக்கு கிருஷ்ணராஜபுரத்துக்குச் செல்லும். இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதேபோல், சொச்சுவேலியில் இருந்து செப்டம்பர் 4, 11, 18, 25 அக்டோபர் 2, 9, 16, 23, 30-ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு (திங்கள்கிழமைகளில்) புறப்படும் சிறப்பு கட்டண ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக வியாழக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு நிஜாமுதீன் செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (24-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும்.

ரயில் ரத்து

வடகிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால், தாம்பரத்தில் இருந்து வரும் 24-ம் தேதி (இன்று) புறப்பட வேண்டிய திப்ரூகர் வாராந்திர விரைவு ரயில் (15929) சேவை ரத்து செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x