Published : 07 Jun 2017 08:51 AM
Last Updated : 07 Jun 2017 08:51 AM

3 அணியாக பிரிந்து கிடக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்: சட்டப்பேரவையில் மசோதாக்கள் சிக்கலின்றி நிறைவேறுமா?

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பிரிவு களாக பிரிந்து கிடப்பதால் சட்டப் பேரவையில் மானிய கோரிக்கை கள், மசோதாக்கள் சிக்கலின்றி நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் ஏற்கெனவே ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி தலைமையில் 2 அணிகள் உள்ளன. தற்போது டிடிவி தினகரன் தலை மையில் 3-வது அணியும் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், முதல் வர் பழனிசாமியும் தினகரனும் எம்எல்ஏக்களுடன் நேற்று தனித் தனியாக ஆலோசனை நடத்தி னர். இதனால், அதிமுக எம்எல்ஏக் களிடையே குழப்பமும் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.

கடந்த பிப்ரவரியில் முதல்வ ராக பழனிசாமி பொறுப்பேற்றார். அப்போது பேரவையில் பெரும் பான்மையை நிரூபித்தபோது, 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந் தது. ஓபிஎஸ் அணியில் 11 பேர் இருந்தனர். தற்போதும் ஓபிஎஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், நேற்று 27 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்துள்ளனர். இதனால், முதல்வர் கே.பழனி சாமிக்கு ஆதரவாக 95 எம்எல்ஏக் கள் மட்டுமே இருப்பதாக கூறப் படுகிறது.

இதன்மூலம், சட்டப்பேரவையில் அதிமுக மீண்டும் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருமுறை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் அதுபோன்ற நிகழ்வை பேரவையில் நடத்த முடியாது என்பது விதி. ஏற்கெனவே பிப்ரவரி 18-ம் தேதி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு பிறகே மீண்டும் நம்பிக்கை வாக்கு கோர முடியும்.

ஆனால், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மசோதாக்கள், மானிய கோரிக்கைகள் மீதான வாக்கெடுப் பில் எதிர்த்து வாக்களித்து அரசை தோற்கடிக்க முடியும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக அம்மா அணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தினகரனை சந்தித்த எம்எல்ஏக் கள் அனைவரும் அவருக்கு மட்டும் ஆதரவானவர்கள் என எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் கள் அரசையும் ஆதரிக்கின்றனர். தினகரனை சந்தித்த எம்எல்ஏக்கள் முதல்வருடனான கூட்டத்திலும் பங்கேற்றுள்ளனர். எனவே, அரசுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. சட்டப்பேரவையிலும் மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x