Published : 19 Aug 2017 09:53 AM
Last Updated : 19 Aug 2017 09:53 AM

மஹாளய அமாவாசை: மதுரை - காசிக்கு செப்.15-ல் சிறப்பு ரயில்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் இருந்து சென்னை வழியாக காசிக்கு ஆன்மீக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த 2005 முதல் இதுவரை இயக் கப்பட்டுள்ள 295 ஐஆர்சிடிசி சிறப்பு ரயில்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். வரும் செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக காசிக்கு ஆன்மீக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக காசிக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது.

கங்கை நதியில் புனித நீராடி காசி விஸ்வநாதரை தரிசிக்கவும், மஹாளய அமாவாசை அன்று கயாவில் முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஹரித்துவாரில் மானசதேவி தரிசனம், டெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், ராஜ்காட் உள்ளிட்ட இடங்களை பார்வையிடல், மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை தரிசித்தல் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். 11 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒருவருக்கு ரூ.10,395 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சைவ உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை அடங்கும். இது தொடர்பாக மேலும் தகவல் களைப் பெற 90031 40681 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x