Published : 11 Nov 2014 11:28 AM
Last Updated : 11 Nov 2014 11:28 AM

‘அவசரகால நிலையை நினைவுபடுத்துகிறது தமிழக அரசின் நடவடிக்கை’: எச்.ராஜா குற்றச்சாட்டு

இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தைப் போல நீதிமன்றங் களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இன்றைய தமிழக அரசு என்றார் பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜா.

திருச்சியில் நேற்று செய்தியா ளர்களிடம் அவர் மேலும் கூறியது:

இந்திரா காந்தி எமர்ஜென்ஸி கொண்டுவந்தபோது அவருக்கு அடிமையாக இருந்து வேலை செய்தவர்கள் எல்லாம் நீதிமன் றங்களுக்கு எதிராகச் செயல் பட்டார்கள். அந்த காலகட்டத்தில் ஒன்றரை ஆண்டுகள் எந்த அரசியல் கட்சியும் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட முடியவில்லை. அதேபோலத்தான் இப்போது தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம் ஆர்.எஸ்.எஸ். பேரணி யைத் தடை செய்துள்ளது.

காஷ்மீரில்கூட ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நடத்தத் தடை விதிக்கின்றனர். இது கண்ட னத்துக்குரியது.

இந்திரா காந்தி காலத்தில் அப்போது தவறு செய்தவர்கள் ஷா கமிஷன் விசாரணையில் தண்டனை பெற்றார்கள் என்பதை தமிழக அரசுக்கு நினைவுபடுத்துகிறேன்.

கனிம மணல் கொள்ளையில் ஈடுபட்ட வைகுண்டராஜன் வெளி நாடு சென்றுவிட்டதாகவும் தலை மறைவாகி விட்டதாகவும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை என்று அனைத்தையும் சகாயம் ஐஏஎஸ்-தான் விசாரிக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு தீர்வு கிடைக்கும்.

தமிழக அரசு பால் விலையை ரூ.10 என உயர்த்தியுள்ளது. இந்த உயர்வை ரூ.4.50 ஆக குறைக்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது.

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x