Published : 07 Aug 2017 10:27 AM
Last Updated : 07 Aug 2017 10:27 AM

புற்றுநோயாளிகளுக்காக முடிதானம் செய்த சிறுமிகள்

புதுச்சேரி கள விளம்பர அலுவல கம் சார்பில் நடைபெற்ற மருத் துவ முகாமில் புற்று நோயாளி களுக்காக சிறுமிகள் முடிதானம் செய்தனர்.

புதுச்சேரி கள விளம்பர அலுவல கமும் சென்னை கொரட்டூர் ரோட்டரி சங்கமும் இணைந்து நேற்று கிழக்குத் தாம்பரம் கிறிஸ்துராஜா நடுநிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம், புற்றநோய் பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவத் தாவரங்கள் கண்காட்சி போன்றவற்றை நடத்தியது. இந்நிகழ்ச்சியை மத்திய அரசின்

கள விளம்பர அலுவகத்தின் மண்டல இயக்குநர் மா.அண்ணா துரை தொடங்கிவைத்தார்.

ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஐசக் நாசர், புதுச்சேரி கள விளம்பர உதவி இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார், இம்காப்ஸ் இயக்குநர் மருத்துவர் கே.பி.அருச்சுனன், வேலூர் கிராமத் தாவரவியல் வல்லுனர் மருத்துவர் ப.செல்வம், தமிழ் பாரம்பரிய தற்காப்புக் கலை கல்வி மற்றம் ஆராய்ச்சி மைய இயக்குநர் என்.ரமேஷ் ஆசான், ரோட்டரி உதவி ஆளுநர்கள் கணபதி சுரேஷ் மற்றும் எஸ்.அண்ணா மலை, சமுதாய நலப் பிரிவின் ரோட்டரி மாவட்ட இயக்குநர் வி.சதிஷ், அன்னட் சங்க தலைவி பி.தாட்சாயிணி, போனிடெயில் திட்ட தலைவி கவிதா ராம்மோகன் ஆகியோர் கலந்துகொண் டனர்.

இந்நிகழ்ச்சியில் 8-ம் வகுப்பு படிக்கும் இரட்டையர்களான கரிஷ்மா மற்றும் கன்னிகா, இந்திரா அன்பழகன், தமிழ்ச்செல்வி ஆகியோர் தங்களது முடியின் ஒரு பகுதியைத் தானமாக வழங்கினர். மாணவிகள் கரிஷ்மா மற்றும் கன்னிகா இருவருக்கும் கள விளம்பர இயக்குநர் அண்ணாதுரை பரிசுகள் வழங்கி பாராட்டினார். வேலூர் புற்று மகரிஷி சமூக சேவை மருத்துவ மையத்தின் சார்பில் மூலிகைக் கண்காட்சியும், இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாமும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சென்னை கொரட்டூர் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.சண்முகநாதன், செயலாளர் ஜி.அன்பழகன், சமுதாய மேம்பாட்டு இயக்குநர் இ.யேசு ராஜன், சமுதாய சேவை-ஆரோக்கியம் பிரிவு இயக்குநர் எஸ்.அருளானந்த குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

2016-ம் ஆண்டில் இந்தியா வில் சுமார் 14.5லட்சம் புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை 2020-ல் 17.3லட்சமாக அதிகரிக்கும் என்றும் . நம் நாட்டில் 12.5சதவிகித புற்றுநோயாளிகள் மட்டுமே ஆரம்ப நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயைப் பூரணமாகக் குணப்படுத்த முடியும் என்று புதுச்சேரி கள விளம்பர உதவி இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x