Published : 01 Aug 2017 08:49 AM
Last Updated : 01 Aug 2017 08:49 AM

தமிழ், தமிழர்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் வீர சந்தானம்: நினைவஞ்சலி கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

தமிழுக்காகவும், தமிழர்களுக்காக வும் வாழ்நாள் முழுவதும் போராடியவர் ஓவியர் வீர சந்தானம் என நல்லகண்ணு, வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலை வர்கள் புகழாரம் சூட்டினர்.

சமீபத்தில் மறைந்த ஓவியர் வீர சந்தானத்தின் நினைவஞ்சலி கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், புதிய பார்வை இதழாசிரியர் ம.நடராசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், புதிய பார்வை இதழாசிரியர் ம.நடராசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தலைவர்கள் பேசியது:

வைகோ:

தமிழ், தமிழர்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் ஓவியர் வீர சந்தானம். அவர் வெறும் படைப்பாளி மட்டுமல்ல. உலகத் தமிழர்களைத் தனது சொந்தமாக கருதி யவர். தனது ஓவியங்கள் மூலம் போர்க் குரலை எழுப்பிக் கொண்டிருந்தவர். அவர் மறைந்தாலும் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் உள்ள அவரது ஓவியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

நல்லகண்ணு:

ஓவியர் வீர சந்தானம் சிறந்த ஓவியர் மட்டுமல்ல. தலைசிறந்த மனிதாபிமானி. தற் போது தமிழகத்துக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. தமிழகம் தற்போது சோதனக் காலகட்டத்தில் உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் அனைத்து வகைகளிலும் புறக்கணிப்பட்டு வருகிறது. மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்தச் சூழலில் வீர சந்தானம் போன்றவர்கள் வாழ்க்கையே நமக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஜாதி, மதம் என பிரியாமல் தமிழர் என்ற உணர்வோடு நாம் ஒன்றுபட வேண்டும்.

ம.நடராசன்:

ஈழத் தமிழர் நலனுக்கான எந்தப் போராட்டமாக இருந்தாலும் முதல் ஆளாக வீர சந்தானம் இருப்பார். தமிழர் உணர்வாளர்களுக்கு எப்போதும் உற்சாகம் ஊட்டியவர். தமிழ், தமிழர்களுக்காக தன் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை போராடியவர். அவரது மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x