அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி: முக்கிய நிர்வாகிகளின் பேச்சுகளால் உச்சகட்ட குழப்பம்

அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி: முக்கிய நிர்வாகிகளின் பேச்சுகளால் உச்சகட்ட குழப்பம்
Updated on
2 min read

அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வருவதால் இணைப்பு முயற்சியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சி, ஆட்சியில் அங்கீகாரம் கிடைக்காத வர்கள் தனி அணியாக பிரிந்து ரகசிய கூட்டம் நடத்தி வருவதால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரு அணி யிலும் குழுக்கள் அமைக்கப் பட்டும் பேச்சுவார்த்தை தொடங் கப்படாமலே இழுபறியில் உள்ளது. முதல்வர் பழனிசாமி தரப்புக்கு வைக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படாததால், ஓபிஎஸ் தரப்பும் பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறது.

அதேநேரத்தில், இருதரப்பு நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்களில் பேட்டி அளிப்பதால் இணைப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ‘‘தளவாய் சுந்தரம், நாஞ்சில் சம்பத் ஆகியோரை கட்சியில் இருந்து வெளியேற்றினால் பேச்சுவார்த்தை நடக்கும்’’ என ஓபிஎஸ் அணியின் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கே.பி.முனுசாமி கூறினார்.

மதுரையில் நேற்று முன்தினம் பேசிய முன்னாள் மேயரும், எம்எல்ஏவுமான ராஜன் செல் லப்பா, ‘பேச்சுவார்த்தைக் குழுவை கலைக்க வேண்டும்’ என்றார். இந்நிலையில் நேற்று காலை விமான நிலையத்தில் நிருபர் களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் இ.மதுசூதனன், ‘‘பேச்சுவார்த் தைக்கு அழைத்து எங்களை அழிக் கப் பார்க்கின்றனர். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை வெளி யேற்றினால் பேச்சு சுமுகமாக நடக்கும்’’ என்றார்.

இதுபற்றி அமைச்சர் டி.ஜெயக் குமாரிடம் கேட்டபோது, ‘‘அமா வாசை இருட்டில் பெருச்சாளி போவதெல்லாம் வழி என்பது மதுசூதனனுக்குத்தான் பொருந் தும். சகோதரர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வந்தால் கட்சியிலும், ஆட்சியிலும் அவர்களுக்கு உரிய மரியாதை, பொறுப்பு அளிக்கப் படும். ஆனால், அவர்கள் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கூறி முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்’’ என்றார்.

இவ்வாறு அமைச்சர்களும், நிர்வாகிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி பேசிவருவதால் இணைப்புக்கான பேச்சுவார்த்தை கானல் நீராகவே நீடித்து வருகிறது.

ரகசிய கூட்டம்

இதற்கிடையே, முதல்வர் பழனி சாமி அணியில் அங்கீகாரம் மற்றும் பதவியை முன்னிறுத்தி மேலும் இரு குழுக்கள் தனியாக செயல் பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, தலித் எம்எல்ஏக்கள் பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச் செல்வன் தலைமையில் ஆலோ சனை நடத்தினர்.

பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் மற்றும் 8 எம்எல்ஏக்கள் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந் நிலையில், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் இவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. கூட்டம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் அவர்கள் விடுதியில் இருந்ததும் உறுதியானது.

முதல்வர் பழனிசாமி தலை மையிலான அமைச்சரவையில் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு பிரதிநிதித் துவம் கிடைக்கலாம் என கூறப் பட்டது. ஆனால், அமைச்சரவை யில் மாற்றம் செய்யப்படவில்லை. தங்களுக்கான அங்கீகாரம் கிடைக் காததால் ரகசிய ஆலோசனை யில் ஈடுபட்டு வருவதாக அவர்களது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in