மீனவர்களுக்கு தூக்கு தண்டனை எதிர்த்து அப்பீல்: கொழும்பு நீதிமன்றத் தீர்ப்பை மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்

மீனவர்களுக்கு தூக்கு தண்டனை எதிர்த்து அப்பீல்: கொழும்பு நீதிமன்றத் தீர்ப்பை மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்
Updated on
1 min read

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு நகல், தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. மேல்முறையீடு செய்வதற்காக சிங்கள மொழியில் உள்ள தீர்ப்பை மொழி பெயர்க்கும் பணியில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசின் உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல் கள் வருமாறு: தற்போது பிரதமர் அலுவலகத்தின் வெளியுறவுத் துறைக்கு தமிழக அரசின் வேண்டு கோள் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரை, வெளியுறவுத் துறை அதிகாரிகள் அழைத்து, மீனவர்களின் வழக்கில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் சார்பில் வாதாடுவதற்கு, கொழும்பு உயர் நீதிமன்ற பார் கவுன்சில் அனுமதி பெற்ற, தமிழ் தெரிந்த மூத்த வழக்கறிஞரை தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது.

இந்நிலையில், கொழும்பு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல், கடந்த புதன்கிழமைதான் இந்தியத் தூதரகம் மூலம் மத்திய வெளியு றவுத் துறைக்கு கிடைத்துள்ளது. இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் புத்த மடங்களில் உள்ள இலங்கைத் துறவிகள் மூலம் இந்த மொழி பெயர்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இலங்கை அரசின் போதைப் பொருள் ஒழிப்பு சட்டங்களையும், அதன் அம்சங்களையும் தொகுக்கும் பணியும் நடந்து வருகிறது. இவை முடிவதற்கு, 10 நாட்களுக்கு மேலாகும். அதற்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞரை நியமித்து, தூக்கு தண்டனை பெற்ற மீனவர்க ளுக்கு ஜாமீன் பெறவும், தண்டனையை நிறுத்தக்கோரி மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்யவும் நட வடிக்கைகள் எடுக்கப்படுகின் றன.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனீவா ஒப்பந்தப்படி..

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க கப்பலை இந்தியக் கடற் படையினர் பிடித்து, தமிழக போலீசில் ஒப்படைத்தனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேர் கைது செய் யப்பட்டு சென்னை புழல் சிறை யில் அடைக்கப்பட்டனர். சம்பந்தப் பட்ட நாட்டு தூதரகங்கள் மூலம், அனைவருக்கும் தமிழகத் தில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட் டனர். அவர்களுக்கு மதுரை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்த பிறகு, நிபந்தனைகள் அடிப்படை யில் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட் டனர். சர்வதேச மனித உரிமைகளுக் கான ஜெனீவா ஒப்பந்த அடிப் படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தைப் பின்பற்றி, தமிழக மீனவர்களை இலங்கை அரசு 3 ஆண்டுகளாக சிறையிலேயே வைத்துள்ளது. எனவே, ஜெனிவா ஒப்பந்தப்படியும் இலங்கை அரசிடம் பேச்சு நடத்தி, வழக்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in