

புற்றுநோய் கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா தெரிவித்தார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையில் “தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்” நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வது தொடர்பான பயிற்சி, தமிழ்நாடு தன்னார்வ ஹெல்த் அசோசியேஷனை சேர்ந்த சுமார் 100 பேருக்கு அளிக்கப்பட்டது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘புற்றுநோய் வந்தால் யாரும் பயப்பட வேண்டாம். அந்த புற்றுநோயை காலதாமதமாக கண்டுபிடித்தால்தான் பயப்பட வேண்டும்.
ஆரம்பத்திலேயே சிகிச்சைப் பெற்றால், புற்றுநோயை முழுவதுமாக குணப் படுத்திவிடலாம். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மனை பேராசிரியர் டாக்டர் விதுபாலா, புள்ளியி யல் துறை தலைவர் ஆர்.சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.