Published : 01 May 2017 01:10 PM
Last Updated : 01 May 2017 01:10 PM

முதல்வர் பழனிசாமியின் கருத்தால் சிக்கல்: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதா?

5-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்குகிறார் ஓபிஎஸ்

‘தலைமை நிர்வாகிகள், எம்எல்ஏக் கள் அனைவரும் நம்மிடத்தில் உள்ள னர். பிரிந்து சென்றவர்கள் இணைந் தாலும், இணையாவிட்டாலும் பரவா யில்லை’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது ஓபிஎஸ் அணியை அதிர்ச்சியடைய வைத் துள்ளது. இதனால், அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இனி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக சசிகலா, ஓபிஎஸ் அணிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டது. குழு அமைத்து 2 வாரங்களாகியும் இதுவரை பேச்சு வார்த்தை தொடங்கவில்லை. இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்துகளை சிலர் கூறி வருவதால் பேச்சுவார்த் தையில் சிக்கல் ஏற்பட்டது.

ஓபிஎஸ் தரப்பை பொறுத்தவரை, அதிமுகவில் இருந்து சசிகலா மற் றும் குடும்பத்தினரை நீக்க வேண் டும், ஜெயலலிதா மரணம் தொடர் பாக சிபிஐ விசாரணைக்கு பரிந் துரைக்க வேண்டும் என்ற இரு நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தை என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, டிடிவி தின கரனை கட்சியை விட்டு ஒதுக்கு வதாக முதல்வர் பழனிசாமி தரப்பு அறிவித்தது. ஆனால், கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிமுக அம்மா கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தில், தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய பிரமாண பத்திரங்களில் கையெழுத்து பெறப் பட்டது. அதில், பொதுச்செயலாள ராக சசிகலா, துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மற்றும் முதல்வர் கே.பழனிசாமியை ஆதரிப்பதாக வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இது ஓபிஎஸ் தரப் புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தங்களது 2 நிபந்தனை களை செயல்படுத்தினால்தான் பேச்சுவார்த்தை என அறிவித்து விட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த மாவட்ட நிர்வாகி கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘கட்சியும், ஆட்சியும் நம்மிடத்தில் உள்ளது. 90 சதவீத தலைமை நிர்வாகிகள் நம்மிடத்தில் உள்ளனர். எனவே, பிரிந்து சென்றவர்கள் இணைந்தா லும் பரவாயில்லை. இணையாவிட் டாலும் பரவாயில்லை. கட்சியில் 48 மாவட்டச் செயலாளர்கள், 123 எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,127 பேரில் 2,023 பேர் நம்மிடம் உள்ளனர்’’ என்றார்.

மேலும், நேற்று முன்தினம் தஞ்சையில் நடந்த சசிகலாவின் உறவினர் மகாதேவன் படத்திறப்பு நிகழ்ச்சியில் 3 அமைச்சர்கள் பங் கேற்றுள்ளனர். இதனால் கோப மடைந்த ஓபிஎஸ் அணி, பேச்சு வார்த்தைக் குழுவை கலைத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை அந்தக் குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் மறுத்துள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறும்போது, ‘‘எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண் டால் நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். குழு கலைக் கப்படவில்லை’’ என்றார்.

கோவையில் நேற்று நிருபர்களி டம் பேசிய சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகி யோர், ‘‘இரு தரப்பும் பேச்சு வார்த்தை மூலம் ஒன்றுபடும். இணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகி களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அணிகள் இணைப்பில் உள்ள சிக்கல்கள், முதல்வரின் பேச்சு, பிரமாண பத்திரம், எம்ஜிஆர் நூற் றாண்டு விழா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஏற் கெனவே அறிவித்த நீதி கேட்டு நெடும் பயணத்தை தொடங்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.

வரும் 5-ம் தேதி காஞ்சிபுரத்தில் பயணத்தை தொடங்கும் ஓபிஎஸ், தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் செல்கிறார். அவரது பயண திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறி விப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்தப் பயணத் தின்போது மாவட்டங்களில் முன் னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர் வாகிகள், தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோருவார் என நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x