

காவிரியில் புதிய அணைகள் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசி யல் கட்சிகள் ஓரணியில் திரண்டுப் போராட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
தஞ்சாவூரில் நேற்று நடை பெற்ற மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ.ராமமூர்த்தி-சரஸ்வதி தம்பதி யின் முத்து விழாவில் அவர் பேசியது:
தமிழகத்தில் பொதுப் பிரச் சினைக்காக அரசியல் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்ட தில்லை. இப்படி இருந்தால் தமிழ கம் எப்படி வளர்ச்சி அடையும்? சேர, சோழ, பாண்டியர் காலத்திலிருந்தே இந்த நிலைமைதான்.
காவிரியில் கர்நாடகம் புதிதாக 2 அணைகள் கட்டவுள்ளன. இதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை என அவர்கள் கூறுகின்றனர். அந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகம் பாலை வனமாக மாறிவிடும். கர்நாடகம் தன்னிச்சையாகச் செயல்பட்டால், இந்தியா என்ற நாடு எதற்கு?
தமிழர்கள் தனித்தனியாக இருந்ததால்தான் தமிழீழத்தைக் காக்கத் தவறிவிட்டோம். இதனால், அங்கு லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் எதிர்காலம் காப் பாற்றப்பட வேண்டுமானால் அனை வரும் ஒன்றாகத் திரள வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றுள்ளனர். இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியாகத் திரண்டு, காவிரியில் புதிய அணைகள் கட்டப்படவுள் ளதை எதிர்த்துப் போராட வேண் டும். அப்போதுதான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலர் தா.பாண்டியன், துணைச் செயலர் சி.மகேந்திரன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பூண்டி கி.துளசிஅய்யா வாண்டையார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ம.நடராசன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த பெ.மணியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.