Published : 05 Aug 2017 08:49 AM
Last Updated : 05 Aug 2017 08:49 AM

நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை: தமிழக அரசை கண்டித்து ஆக.10-ல் ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்

அதிமுக புரட்சித் தலைவி அணி (ஓபிஎஸ்) நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

அதேவேளையில் குடிநீர், நீட்தேர்வு குளறுபடி உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை முன்னி றுத்தி பிரதான எதிர்க்கட்சியைப் போல், முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணி யினர் ஆகஸ்ட் 10-ம் தேதி கண் டன ஆர்ப்பாட்டத்தை அறிவித் துள்ளனர். இதற்கிடையில் கட்சியை பலப்படுத்த தினகரனும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதால், இடியாப்ப சிக்கலில் முதல்வர் பழனிசாமி அணி தவித்து வருகிறது.

அதேவேளையில் ஓ.பன்னீர் செல்வம் தன் அணியை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். இனியும் தங்கள் அணியைச் சேர்ந்தவர்களை வேறு யாரும் இழுத்துவிடக்கூடாது என்பதற் காக, மாவட்ட வாரியாக நிர்வாகி களை நியமிக்கும் முயற்சியில் பட்டியலையும் தயாராக வைத்துள்ளார்.

மேலும், தனது ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வருமாறு பன்னீர் செல்வம் அழைப்பு விடுத் துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் மாவட்ட நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் இன்று ஆலோ சனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் இருக்கும் என ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

மேலும் பிரதான எதிர்க் கட்சியைப்போல், அரசுக்கு எதிரான போராட்டத்தையும் தற்போது ஓபிஎஸ் கையில் எடுத்துள்ளார். குடிநீர் பிரச்சினை, டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு குளறுபடி, விவசாயிகள் பிரச்சினை, மாநகராட்சி நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் மெத்தனமாக இருப்பதாகக் கூறி முதல்வர் பழனிசாமி அரசை கண்டித்து ஓபிஎஸ் தலைமையில் வரும் 10-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

வடசென்னையில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x