Published : 05 Aug 2017 09:36 AM
Last Updated : 05 Aug 2017 09:36 AM

எம்.ஃபில். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

சென்னை தரமணியில் அமைந் துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டில் முழுநேர எம்.ஃபில் (தமிழ்) படிப்பில் சேர விண்ணப் பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ulakaththamizh.org) இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எனில் ரூ.200 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி ஆகும். நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நுழைவுத்தேர்வு செப்டம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கும். இப்படிப்புக்கான கல்விக் கட்டணம் ரூ.4,600. மாணவர் சேர்க்கை தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x