

டாக்டரை துப்பாக்கி முனையில் மிரட்டி 114 சவரன் கொள்ளை யடித்த வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். கொள்ளையர்களை பிடிக்க சென்னை போலீஸார் கொல் கத்தா சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிழக்கு அண்ணா நகர் க்யூ பிளாக் 15-வது நிழற் சாலையில் வசிப்பவர் டாக்டர் ஆனந்தன். அரும்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் இருதய சிகிச்சை நிபுணராக உள்ளார். நேற்று முன்தினம் டாக்டர் ஆனந்தன், அவரது மனைவி சாந்தி, மாமியார் ஆண்டாள் மற்றும் வேலைக் காரி மீனா என்ற ஹக்கிமா பேகம் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அப்போது பிற்பகல் 2 மணியள வில் ஆனந்தன் வீட்டுக்குள் 2 பேர் புகுந்து, கைத்துப்பாக்கியை காட்டி வீட்டில் இருந்தவர்களை மிரட்டி கயிற்றால் கட்டி ஓர் அறையில் அடைத்தனர். பின்னர் பீரோ சாவி இருக்கும் இடத்தை கேட்டு எடுத்து அதிலிருந்த 114 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கடந்த நிலையில் ஆனந்தனின் மகன் வீட்டுக்கு வந்தபோது, அனைவரும் கயிற் றால் கட்டிப்போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சிக்கிய வேலைக்காரி
புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையர் மனோகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டு வேலைக்காரி மீனா கொல்கத் தாவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதனால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மீனாவை அழைத்துக் கொண்டு அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். முதலில் இக்கொள்ளை சம்பவம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்த அவர் போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.
கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம்
டாக்டர் ஆனந்தனின் வீட்டில் விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைர நகைகள் எப்போதும் பீரோவில் இருப்பதை உறுதி செய்துகொண்ட அவர் அதை தனது கணவருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள் ளார். இதற்காக மீனாவின் கணவர் இர்பான் கொல்கத்தாவில் இருந்து தனது நண்பர்கள் 4 பேருடன் சென்னை வந்துள்ளார். மீனா வீட்டில் இருக்கும்போதே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற இர்பானும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மீனாவையும் கட்டிப்போட்டு கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
போலீஸார் விசாரணை நடத்தியபோது மீனா எதுவும் தெரியாத அப்பாவி போல நாடகம் ஆடினார். ஆனந்தனின் வீடு இருக்கும் பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் 5 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் மீனாவின் செல்போனை யும் போலீஸார் ஆய்வு செய்த னர். அதில் இருந்த சில போட் டோக்களும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த 2 பேரின் புகைப்படங்களும் ஒரே மாதிரி இருந்தன. அந்த இரண்டையும் காட்டி மீனாவிடம் விசாரிக்க, இனி தப்பிப்பதற்கு வழி இல்லை என்ற நிலையில், கொள்ளையடிப்பதற்கு போட்ட அத்தனை திட்டங்களையும் போலீ ஸாரிடம் கூறியிருக்கிறார் மீனா.
கொல்கத்தா விரைவு
கொள்ளையர்கள் 5 பேரையும் பிடிக்க சென்ட்ரல் மற்றும் எழும் பூர் ரயில் நிலையங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட் டது. ஆனால் அவர்கள் சிக்க வில்லை. அண்ணாநகரில் வேறொரு இடத்தில் பதுங்கி இருந்த இர்பானையும், அவரது கூட்டாளிகளையும் போலீஸார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர்கள் கடைசி நேரத்தில் போலீஸிடம் இருந்து தப்பிவிட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்துடன் 5 பேரும் ஏதாவது லாரியில் ஏறி கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள். இதையடுத்து வேலைக்காரி மீனா வையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலையே தனிப்படை போலீஸார் கொல்கத்தா புறப்பட்டுவிட்டனர். அங்கு உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.