Published : 28 Apr 2017 09:01 AM
Last Updated : 28 Apr 2017 09:01 AM

சசிகலா பொதுச் செயலாளர், தினகரன் துணைப் பொதுச் செயலாளர்: எடப்பாடி அணி பிரமாண பத்திரத்தால் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சி - அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் மீண்டும் சிக்கல்?

சசிகலாவை பொதுச் செயலாளராக வும், டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராகவும் ஆதரிப்ப தாக எடப்பாடி அணியினர் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருவதால் ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

அதிமுகவின் இரு அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று 3-வது நாளாக அதிமுக அம்மா கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, பேச்சுவார்த்தைக் குழு தலைவர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தினகரன் ஆதரவாளர்களான கலைராஜன், வெற்றிவேல் ஆகியோரும் வந் திருந்தனர்.

மாவட்டச் செயலாளர்களிடம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பிரமாண பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை விரைவில் பூர்த்தி செய்து, உரியவர்களிடம் கையொப்பம் பெற்று மே 5-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டம் முடிந்ததும் நிருபர்களி டம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘ஜெயலலிதா விரும் பியதைப்போல எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மே தினத்தையும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையம் கேட்டுள்ள பிரமாணப் பத்திரங்களுக்கான படிவங்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எப்போது வந்தாலும் பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என்றார்.

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல் வம் தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்து வதற்கான சூழல் உருவாகி இருந்த நிலையில், அதிமுக அம்மா அணி யின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரமாணப் பத்திர படிவத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராகவும் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செய லாளராகவும், சட்டப்பேரவை கட்சித் தலைவர் மற்றும் தலைமை நிலையச் செயலாளராக எடப்பாடி கே.பழனி சாமியையும் முழுமனதாக ஆதரிப் பது என்று உறுதியளிப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந் துள்ளனர். சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் கூறிவரும் நிலையில், இந்த பிரமாணப் பத்திர விவகாரம், பேச்சுவார்த்தையில் மீண்டும் சிக் கலை ஏற்படுத்தியுள்ளது. பேச்சு வார்த்தையை நடத்துவதா, வேண் டாமா என்பது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசித்து வரு கின்றனர்.

இதுகுறித்து, ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறும்போது, ‘‘ஒரு புறம் பேச்சுவார்த்தை என கூறி விட்டு, மறுபுறம் இதுபோன்ற பிர மாணப் பத்திரத்தில் கையொப்பம் பெற்று வருகின்றனர். இது எந்த வகையில் நியாயம். எங்கள் நிபந்தனைகளை ஏற்று அவற்றை செயல்படுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடங்க முடியும்’’ என்றார்.

27 எம்எல்ஏக்கள் யார் பக்கம்?

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் எடுக் கப்பட்டு வரும் நிலையில், தலித் எம்எல்ஏக்கள் 27 பேர் தனியாக பிரிந்து கூட்டம் நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தலைமையில் அவர்கள் அணி சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழலை பயன்படுத்தி அமைச்சரவையில் தங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தனி அணியாக உள்ள தலித் எம்எல்ஏக்களை சமாதானப்படுத் தும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x