சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுமா?- மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று ஆய்வு

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுமா?- மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று ஆய்வு
Updated on
1 min read

சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று ராமே சுவரம் வருகிறார். அவர் மண்ட பத்திலிருந்து தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே யான மணல்திட்டுகள், மன்னார் வளைகுடா, கடற் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வை யிடுகிறார்.

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இந்த கடற்பகுதியில் கடலின் ஆழம் அதிகபட்சம் 12 அடியாகும். இந்த மணல் திட்டுகள், அதனை ஒட்டிய மன்னார் மற்றும் பாக் ஜலசந்தி கடற்பரப்பு பகுதிகளை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் திட்டமாகும்.

ஆதரவு

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேது கால்வாய் வழியாக, வங்கக் கடலை அடைய முடியும். இதனால், இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல் மைல் வரை குறைவதுடன் கப்பல்களின் 30 மணி பயண நேரம், மிச்சமாவதோடு எரிபொருள் சேமிப்பு கிடைக்கும். மேலும் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் மேம்படுவதுடன், தூத்துக்குடி துறைமுகமும் தமிழ கத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.

மன்னார், பாக் ஜலசந்தி கடற் பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும், கடலரிப்பு, மீன் இனங்கள் இடம்பெயரும் அபாயம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ரீதியிலும் சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிரான கருத்துகளும் உள்ளன.

ராமர் பாலத்துக்கு ஆபத்தா?

சேதுபாலம், ஆதாம் பாலம், ராமர் பாலம் என அழைக் கப்படும் தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடைப்பட்ட மணல் திட்டுப் பகுதிகள் ராமா யணம் மற்றும் இந்து சமய நம்பிக்கைளோடு தொடர்புடை யனவாகும்.

மேலும் ராமர் கட்டிய பாலம் என பலரால் நம்பப்படுகிறது. சேது சமுத்திர திட்டத்தால் இந்த மணல் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி, இந்து அமைப்புகள் திட்டத்தை எதிர்க்கின்றன.

இது இந்துக்களின் உணர்வு களை புண்படுத்தும் எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ராமர் பாலம் பகுதிக்கு சேதம் வராமல் தனுஷ்கோடி வழியாக சேதுசமுத்திரம் திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற பரிந்துரைத்தது.

செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் மண்டபம் கடற்படை முகாமுக்கு வருகைதரும் நிதின் கட்கரி ஹெலிகாப்டர் மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டம் குறித்த தனது முடிவை அறிவிக்கும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in