Published : 08 Aug 2017 08:36 AM
Last Updated : 08 Aug 2017 08:36 AM

பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் இதர பாட பட்டதாரி ஆசிரியர்களைப் போல எம்.ஃபில் படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும்: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் இதர பாட பட்டதாரி ஆசிரியர் களைப் போன்று எம்.ஃபில் கல்வித்தகுதிக்கு 2-வது ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக் கும் உயர் கல்வித் தகுதிகளுக்கு 2 ஊக்க ஊதிய உயர்வுகள் (Incentives) வழங்கப்படுகின்றன. இவ்வாறு ஆசிரியர்கள் தங்கள் மொத்த பணிக்காலத்தில் உயர் கல்வித் தகுதிக்காக அதிகபட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம். பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரி யர்கள் எம்.எட். கல்வித்தகுதியை தொலைதூரக்கல்வி திட்டத்தில் முடித்து அதற்காக ஊக்க ஊதியம் பெற்று வந்தனர்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்.எட் படிப்பை நீக்கிவிட்டதால், பணியில் உள்ள ஆசிரியர்கள் தொலைதூரக்கல்வி முறையில் எம்.எட். படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ அல்லது எம்.எஸ்சி படிப்புக்கு முதலாவது ஊக்க ஊதியமும், எம்எட் கல்வித்தகுதிக்குப் பதிலாக எம்.எட் அல்லது எம்.ஃபில் அல்லது பிஎச்.டி-இவற்றில் ஏதேனும் ஒரு கல்வித்தகுதிக்கு 2-வது ஊக்க ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்ற கடந்த 17.07.2013 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அர சாணையின் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட் அல்லது எம்.ஃபில். அல்லது பிஎச்.டி. கல்வித்தகுதிக்கு 2-வது ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருகிறார்கள். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்குவதைப் போல பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் எம்எட் அல்லது எம்.ஃபில் அல்லது பிஎச்.டி கல்வித்தகுதிக்கு 2-வது ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக தமிழாசிரியர் கழகமும், பதவி உயர்த் தப்பட்ட பட்டதாரி மற்றும் தமிழாசிரி யர் கழகத்தின் நிர்வாகிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், ஒரு ஆசிரியர் மொத்த பணிக்காலத்தில் உயர் கல்வித்தகுதிகளுக்கு அதிகபட்சம் 2 ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எம்.எட் அல்லது எம்.ஃபில் அல்லது பிஎச்.டி கல்வித் தகுதி பெற்ற, பி.எட் கல்வித் தகுதியுடன் நியமிக்கப்பட்ட பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் (17.7.2013) வழங்கப்பட வேண்டும்.

இதுகுறித்து தங்கள் மாவட் டத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள், அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு ‘இன்சென்டிவ்’ என்பது அடிப்படைச் சம்பளம், அதற்கு இணையான அகவிலைப்படி கூட்டுத்தொகையில் 6 சதவீத ஊதிய உயர்வு மற்றும் அதற்கு ரிய அகவிலைப்படியை உள்ளடக் கியது ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x