

காஞ்சிபுரத்தில் பால் விலை உயர்வைக் கண்டித்து, திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலாளரை அவதூறாக பேசியதாக திமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே திமுக மாவட்டச் செயலாளர் அன்பரசன் தலைமையில், பால் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அன்பரசன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சி நகர அதிமுகவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.