Published : 08 Aug 2017 11:23 AM
Last Updated : 08 Aug 2017 11:23 AM

ஸ்ரீதியாக பிரம்ம கான சபாவின் ஸ்ரீஜெயந்தி இசை விழா: சென்னையில் 10-ம் தேதி தொடங்குகிறது

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 8-வது ஆண்டு ஸ்ரீ ஜெயந்தி இசை விழா சென்னையில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்குகிறது.

தொழிலதிபர் பி.ஓபுல் ரெட்டி- பி.ஞானாம்பா நினைவாக நடைபெறும் இந்த இசை விழா, சென்னை தியாகராயநகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மகாலில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கி, 24-ம் தேதி வரை நடைபெறகிறது. இவ்விழா, நாமசங்கீர்த்தனம் மற்றும் வாய்ப்பாட்டு கச்சேரிகள் நிறைந்த ஒன்றாகும். தொடக்க நாளான்று விழா மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இந்த விழாவை, சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் என்.கோபாலசுவாமி பங்கேற்று, தொடங்கி வைக்க உள்ளார்.  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மேலாண் இயக்குநர் எம்.முரளி தலைமை வகிக்க உள்ளார். விழாவில், இசையில் சிறந்து விளங்குவோருக்கு பேராசிரியர் வி.வி.சுப்பிரமணியன் வா.வே.சு. பரிசுகள் வழங்கி கவுரவிக்க உள்ளார். இந்த இசை விழாவில், சபா சார்பில் கல்யாணபுரம் உ.வே.ஆராவமுதாச்சாரியாருக்கு “பிரவசன சுதா வாணி” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை ராஜலட்சுமி கல்வி நிறுவனம் வழங்குகிறது. மேலும் வாய்ப்பாட்டுக் கலைஞர் எஸ்.பி.ராம், வயலின் கலைஞர் சி.என்.சீனிவாசமூர்த்தி, கடம் கலைஞர் எச்.சிவராமகிருஷ்ணன், பரதநாட்டியக் கலைஞர் ஹைமஜா ராம்ஷரன், நாடக கலைஞர் எஸ்.சுந்தரராஜன் ஆகியோருக்கு பி.ஓபுல் ரெட்டி- பி.ஞானாம்பா அறக்கட்டளை சார்பில் “வாணி கலா நிபுணா” என்ற விருது வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x