Published : 03 Aug 2017 08:51 AM
Last Updated : 03 Aug 2017 08:51 AM

அமித்ஷாவின் வருகையால் தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 22, 23, 24 தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கட்சி யின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் வரும் அவர், கட்சியின் மாநிலத் தலைவர் முதல் கிளை கமிட்டி தலைவர் வரையிலான நிர்வாகி கள், தொண்டர்களுடன் உரையாட வுள்ளார்.

நாடெங்கும் தனது செயல் திட்டத் தால் வெற்றிக்கனியை பறித்து வரும் அமித்ஷாவின் வருகை தமிழக பாஜக தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவரது வருகை யால் தமிழக அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. அமித்ஷா வின் வருகை தமிழக அரசியலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத் திறப்பு விழாவுக்கு ராமேசுவரம் வருகை தந்த பிரதமர் மோடி, தமிழக மக்களின் உற்சாகம் கண்டு பெருமிதம் கொண்டார்.

பிரதமர் மோடியின் மக்கள் நலத் திட்டங்களை குறைகூறி வரும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ரேஷனில் அரிசி கிடைக்காது, மானிய விலையில் சமையல் எரி வாயு கிடைக்காது என பொய்களை கட்டவிழ்த்து வருகின்றனர்.

நீட் தேர்வு குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின் றன. மாணவர்களின் தகுதியையும், திறமையையும் உயர்த்த நடவ டிக்கை எடுக்காமல் மீண்டும் மீண்டும் விலக்கு கேட்கின்றனர். நீட் தேர்வு குழப்பங்களால் தேர் வான மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். அதிமுக இரு அணிகளும் இணைந்து நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x