Published : 11 Nov 2014 11:42 AM
Last Updated : 11 Nov 2014 11:42 AM

ராஜீவ் வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் பேச்சு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று முன்னாள் சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர் பாக மூத்த பத்திரிகையாளர் ஃபராஸ் அகமது எழுதிய ‘அசாசினேஷன் ஆஃப் ராஜீவ் காந்தி - அன் இன்சைடு ஜாப்?’ என்ற ஆங்கில புத்தகம், கடந்த ஆகஸ்டில் டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

ராஜீவ் காந்தி கொலையை சிவராசன் நடத்தியிருந்தாலும், அவர் யார் என்று சித்தரித்த விதம் யூகத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. ராஜீவை கொல் வதற்கு 3 முயற்சிகள் நடந்தன. அந்த 3 முயற்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடையவை அல்ல. ஆனால், பெரும்புதூரில் நடந்த சம்பவம் புலிகளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த சுப்ரமணியன் சுவாமி, கொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று முதல் நபராக கூறினார். அவரைத் தான் நான் முதலில் விசாரித்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின் றனர். ஒரு விசாரணை அதிகாரி யாக, களத்திலிருந்துதான் விசார ணையை ஆரம்பிக்க வேண்டும். தனிப்பட்ட நபரை விசாரிக்க முடியாது.

ராஜீவ் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஆர்.கே.ராகவன், குண்டு வெடிப்பு நடந்து 12 மணி நேரத்துக்கு பிறகும், ‘இது சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியவில்லை’ என்றார். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த கேமராவில் இருந்த முக்கிய சாட்சியங்களை காவல்துறையைச் சேர்ந்த புகைப்படக்காரர் எடுத்துச் சென்றார். அதை நாங்கள் போராடியே பெற்றோம். இதுபோன்ற நிறைய சிக்கல்கள் விசாரணையின்போது ஏற்பட்டன. ராஜீவ் கொலை வழக்கு பற்றி நான் புத்தகம் எழுதியிருந்தேன். இப்போது ஃபராஸ் அகமதும் எழுதியுள்ளார். இதில் நிறைய கேள்விகள் எழுப்பட்டுள்ளன. இவ்வாறு ரகோத்தமன் பேசினார்.

நூலாசிரியர் ஃபராஸ் அகமது பேசும்போது, ‘‘சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இந்தக் கொலைக் காக அவரை இயக்கியதில் பிரபா கரனுக்கு எந்த தொடர்பும் இருந் திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கொலை, இலங்கை அரசுக்கும் இந்தியாவில் உள்ள சில அரசியல் வாதிகளுக்கும் நன்மை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத் தப்பட்டுள்ளது. எனது புத்தகம் கேள்விகள் மற்றும் ஆதாரங் களுடன் விளக்கும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் திருச்சி வேலுச் சாமி, திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், மூத்த பத்திரிகை யாளர் பகவான் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x