Published : 14 Aug 2017 10:12 AM
Last Updated : 14 Aug 2017 10:12 AM

சிவிஆர்டிஇ நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட பீரங்கி ஆம்புலன்ஸ் ராணுவத்திடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்

ஆவடியில் உள்ள சிவிஆர்டிஇ நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட பீரங்கி ஆம்புலன்ஸ் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள சிவிஆர்டிஇ எனும் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில், மருத்துவ உதவிக்கான கவச தட ஊர்தி (பீரங்கி ஆம்புலன்ஸ்) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடக் தளவாடத் தொழிற்சாலை யில் ரூ.603 கோடி மதிப்பில் 288 கவச தட ஊர்திகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டு இதுவரை 162 ஊர்திகள் தயாரிக்கப்பட்டுள்ளன. போர்க் களத்தில் காயமடைந்த மற்றும் உயிருக்குப் போராடும் வீரர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க இந்த கவச மருத்துவ தட ஊர்தி பயன்படும்.

இதயத் துடிப்பை கண்காணித்து சீராக்கும் நவீன மருத்துவ சாத னங்கள், செயற்கை சுவாசக் கருவி கள், அவசர மருத்துவ உதவிக்கான உறிஞ்சு குழாய்கள், காற்றோட்டக் கருவிகள், கோடை மற்றும் குளிர் காலங்களுக்கேற்ற வகையில் வாகனத்தின் உள் தட்ப வெப்ப நிலையை பராமரிக்கும் வசதி ஆகியவை இந்த வாகனத்தில் உள்ளன.

இந்த ஊர்தியில் உள்ள 8 இருக் கைகளை தேவைக்கு ஏற்ப படுக் கைகளாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

இரு மருத்துவ உதவி யாளர்கள் எப்படிப்பட்ட கரடு முரடான அல்லது பாலைவன மணற் பாங்கான தளத்திலும் தண்ணீரிலும் இந்த ஊர்தியை இயக்கி படை வீரர்களின் உயிரைக் காக்க முடியும்.

இந்த ஊர்தியை ராணுவ தர நிர்ணய கட்டுப்பாட்டு அதிகாரி லெப் டினன்ட் ஜெனரல் ஷாம்ஷெர் சிங்கி டம், சிவிஆர்டிஇ நிறுவனத்தின் இயக்குநர் விஞ்ஞானி பி.சிவகுமார் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை தர நிர்ணய ஆய்வகத் தலைமையக உறுப்பினர் பி.கே.வத்சவா, கூடுதல் பொது இயக்குநர் - போர் ஊர்திகள் (பொறுப்பு) என்.எம்.கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ள பீரங்கி ஆம்புலன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x