ஓபிஎஸ் நாள் குறித்து அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்: அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

ஓபிஎஸ் நாள் குறித்து அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்: அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
Updated on
1 min read

ஓபிஎஸ் தரப்பு நாள் குறித்து அழைத்தால் பேசுவதற்கு நாங்கள் தயார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை நேற்று காலை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் ஆளுநரைச் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் ஜெயக்குமார் கூறிய தாவது: மீன்வளத் துறை பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் நியமிப்பது தொடர்பாக ஆளு நரைச் சந்தித்தேன். பல்கலைக் கழக துணைவேந்தருக்கு விண் ணப்பித்தவர்களிடம் ஆளுநர் இன்று நேர்காணல் நடத்தினார். துறை அமைச்சர் என்ற முறை யில் இதில் பங்கேற்றேன். துறை ரீதியாக மட்டுமே ஆளுநரைச் சந்தித்தேன்.

அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக ஏற்கெனவே தெரிவித் துவிட்டேன். முதல்வர் இல்லத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூடி, பேச்சுவார்த்தை குழு அமைப்பது குறித்து விவாதித் தோம். விரைவில் குழு அமைக்கப் படும். அதில் மூத்த அமைச்சர்கள், கட்சி முன்னோடிகள், தலைமை நிர்வாகிகள் இடம் பெறுவர்.

யார், யாருடன் பேசுவது என்பது முக்கியமில்லை. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறிய கருத்து அடிப்படையில் இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளோம். அவர்கள் குழு அமைத்து, இந்த தேதியில் பேசலாம் என்றால் நாங்களும் பேசத் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

‘‘சசிகலா குடும்பத்தினரை கட்சி யில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்தது, தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஓபிஎஸ் கூறியுள் ளாரே?’’ என்று கேட்டபோது, ‘‘ஜன நாயக நாட்டில் யார் வேண்டு மானாலும், எப்படி வேண்டு மானாலும் கருத்து சொல்லலாம். அமெரிக்காவில் ட்ரம்ப் என்னால் ஜெயித்தார் என நான் கூறலாம். ஓபிஎஸ்ஸால் ஜெயித்ததாககூட அவர் கூறலாம்’’ என்று அமைச்சர் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in