Published : 03 Aug 2017 08:22 AM
Last Updated : 03 Aug 2017 08:22 AM

முதல்வராக பழனிசாமியை தேர்வு செய்தது அதிமுக எம்எல்ஏக்கள்தான்.. சசிகலா அல்ல! - அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம்

முதல்வராக கே.பழனிசாமியை அதிமுக எம்எல்ஏக்கள்தான் தேர்வு செய்தார்கள். வேறு யாரும் அல்ல என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத் தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகி களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’’ என்றார்.

இந்நிலையில், நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலிடம் ஜெயக்குமாரின் கருத்து குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘ஜெயக்குமார் தனது பெயரின் அருகில் போட்டுள்ள பட்டம் பணம் கொடுத்து வாங் கியதா, படித்து வாங்கியதா என்பது தெரியவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா. துணை பொதுச்செயலாளர் தினக ரன். இதுகூட தெரியாமல் அவர் அமைச்சராக உள்ளார். பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியை பற்றி அடிக்கடி கருத்து தெரிவிக்கிறார். ஆனால், அங்கிருந்து கே.பி.முனு சாமி மறுப்பு தெரிவிக்கிறார். இது போன்று பேசுவது தொடருமானால், ஜெயக்குமார் வகிக்கும் மீனவர் பிரிவு செயலாளர் மற்றும் அமைச் சர் பதவிகளை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன். ஆட்சிக்கு தான் முதல்வர் கே.பழனிசாமி தலை வர். கட்சிக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான்’’ என்றார்.

காங்கிரஸ் கலாச்சாரம்

வெற்றிவேலின் கருத்து தொடர் பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘கட்சியைப் பற்றி ஒன்றும் தெரியாதவர் வெற்றிவேல். நாங்கள் 8 முறை சிறைக்குச் சென்றுள்ளோம். கடந்த 1982-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து வருகி றோம். கட்சியை கட்டிக் காக்கும் உரிமையும், ஆட்சியை தொடரும் உரிமையும் எங்களுக்கு உள்ளது. காங்கிரஸில் இருந்து வந்த வெற்றி வேல், அதிமுகவில் காங்கிரஸ் கலாச்சாரத்தை புகுத்த வேண்டும் என்று நினைத்தால் ஒருபோதும் நடக்காது’’ என்றார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த தாவது:

ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் இணையவில்லை என்றால், கட்சி அலுவலகத்தை கைப்பற்றப் போவதாக கூறியுள்ளார்களே?

ஜனநாயகத்தில் யார் வேண்டு மானாலும் கருத்து கூறலாம். ஆனால் அது நடக்க வேண்டும். கட்சியும், ஆட்சியும் முதல்வர் பழனிசாமி தலைமையில்தான் நடக்கிறது.

பழனிசாமியை முதல்வராக் கியதே சசிகலாதான் என்று கூறு கிறார்களே?

அதிமுக எம்எல்ஏக்கள் சேர்ந்து தான் முதல்வரை தேர்வு செய்தோம். வேறு யாரும் முதல்வரை தேர்வு செய்யவில்லை.

இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறதா?

அவர்கள் பேச்சுவார்த்தைக் குழுவைக் கலைத்தாலும் நாங் கள் நம்பிக்கையுடன்தான் இருக்கி றோம். அவர்களும் சூழலை நிச்ச யம் உணர்வார்கள். இந்த ஆட்சி செல்லும் நிலையை உணர்ந்து ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் எங்களு டன் இணைவார்கள். எங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது.

சசிகலா, தினகரன் இருவரும் இணைப்புக்காகத்தான் ஓரம் கட்டப்பட்டுள்ளார்களா? அவர் கள் மீ்ண்டும் கட்சிப் பணிக்கு வருவார்களா?

எங்களுக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை. ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்துபவர் முதல்வர் பழனிசாமிதான்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

கே.பி.முனுசாமி கருத்து

இந்நிலையில், ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் க.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனு சாமி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் கே.பி.முனு சாமி கூறும்போது, ‘‘சசிகலா குடும் பத்தை நீக்க வேண்டும், ஜெயல லிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்ற 2 பிரதான நிபந்தனைகளை முதல்வர் பழனிசாமி அணியினர் ஏற்றுக்கொண்டால் அதிமுக அணிகள் இயற்கையாகவே இணைந்துவிடும்’’ என்றார்.

வெளிப்படையாக மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும், அணிகள் இணைப்புக்கான முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடப்பதாக இரு அணி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x