Published : 28 Aug 2017 12:58 PM
Last Updated : 28 Aug 2017 12:58 PM

சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது: அதிமுக எம்.எல்.ஏ., கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டத்தில் சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைப்பிற்கு பின்னர் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இணைப்பிற்கு பின்னர் சசிகலாவை, தினகரனை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக அணிகள் இணைப்புக்கு பிறகு தினகரன் ஆதரவு தரப்பினர் 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். தனி அணியாக இயங்கி வருகின்றனர். சசிகலாவை நீக்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் பரபரப்பு கூடி வரும் நிலையில் தினகரன் தான் துணைப்பொதுச்செயலாளர் என்ற நிலையில் அடுத்தடுத்து கட்சி மாவட்டச்செயலாளர்களை நீக்கி புதிய மாவட்டச்செயலாளர்களை நியமித்து வருவதால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக நேற்று முதலமைச்சர் பழனிசாமியின் கட்சிப்பதவியையே தினகரன் பறித்தார்.

இந்நிலையில் இன்று திட்டமிட்டப்படி அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டம் துவங்கியது. இந்த நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் முக்கிய தீர்மானமாக சசிகலா மற்றும் தினகரனை நீக்குவது என்ற முடிவை எடுத்துள்ளனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1) சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் , நீக்கம் செல்லாது.

2) நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. ஊடகங்களை ஜெயலலிதா புகழ்பாடும் ஊடகங்களாக மாற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை கட்சியே நடத்தும். 

3) செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாக கூட்டப்பட வேண்டும்.

4) சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது.

என 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x