Published : 08 Aug 2017 04:11 PM
Last Updated : 08 Aug 2017 04:11 PM

திருச்சியில் தயாராகும் ஜல்லிக்கட்டு விநாயகர் சிலை: நிகழாண்டு சதுர்த்தி ஸ்பெஷல்

நிகழாண்டு விநாயகர் சதுர்த்தி சிறப்பாக, திருச்சியில் ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 25-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், திருச்சி கொண் டையம்பேட்டை, திருவெறும்பூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ஆண்டு ஸ்பெஷலாக ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து, திருவெறும்பூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை வடி வமைத்து விற்பனை செய்து வரும் ராஜா(36) கூறியது:

நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையில், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத கிழங்கு மாவு, காகிதக் கூழ் ஆகியவற்றின் கலவையில் சிலைகள் தயாரித்து வருகிறோம். 3 அடி முதல் அதிகபட்சம் 12 அடி வரையிலான சிலைகள் ரூ.3,000 முதல் ரூ.20,000 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

குதிரை மீது வாளுடன் செல்லும் வீரசிவாஜி விநாயகர் சிலை, குதிரை மீது செல்லும் கள்ளழகர் விநாயகர் சிலை, கருடன் மீது செல்லும் கஜேந்திர விநாயகர் சிலை, 5 தலை பாம்புடன் கூடிய விநாயகர், கஜேந்திரமோட்ச விநாயகர் சிலை, டிராகன் விநாயகர் சிலை என வழக்கமான சிலைகள் மட்டுமின்றி பக்தர்கள் கேட்கும் புதிய வடிவங்களிலும் சிலைகளைத் தயாரித்து தருகிறோம்.

கடந்தாண்டு சிவலிங்கத்தை சுமந்து செல்லும் பாகுபலி விநாயகர் சிலை, ஏர் கலப்பை மற்றும் கதிர் அரிவாளுடன் செல்லும் விவசாய விநாயகர் சிலைகள் பிரபலமாக இருந்தன. நிகழாண்டு ஸ்பெஷலாக காளை மீது கம்பீரமாகச் செல்லும் ஜல்லிக்கட்டு விநாயகர் சிலைகளை தயாரித்து வைத்துள்ளோம். இந்த சிலைகளுக்கு திருச்சி மட்டுமின்றி தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமேசுவரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர் கொடுத்துள்ளனர் என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x