

தமிழகத்தில் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக் குவதுடன், ஆசிரியர்களின் தரத் தையும் உயர்த்த நிதி ஒதுக்க வேண்டும் என அப்துல் கலாம் விருது பெற்ற எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்தார். சுதந்திர தினத்தை முன் னிட்டு, நேற்று அப்துல் கலாம், கல்பனாசாவ்லா பெயரில் முதல் வர் விருதுகளை வழங் கினார்.
இதில் அப்துல் கலாம் விருது பெற்ற எஸ்.பி.தியாக ராஜன் கூறியதாவது:
நான் கடந்த 50 ஆண்டுகளாக உயர் கல்வித்துறையில் உள் ளேன். 2003-06 ல் சென்னை பல்கலைக்கழக துணைவேந் தராகவும் இருந்துள்ளேன். மஞ்சள் காமாலை நோயை உருவாக்கும் ஹெபடைடிஸ் பி, சி நோய்க்கிருமிகள் பற்றி ஆய்வு செய்தேன். அந்த கிருமியை கீழாநெல்லி என்ற மூலிகையால் அடியுடன் நீக்க முடியும் என்று நிரூபித்தேன். இதன்கீழ் சென்னை மருத்துவமனைக்காக காப்புரிமையும் பெறப்பட்டு, ஆங்கில மருத்துவ வடிவில், மாத்திரையாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்தோம். இதற்காக தமிழக அரசு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், நான் பல ஆண்டுகளாக நெருங்கி பழகிய அப்துல்கலாமின் பெயரால் விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. அதற் கேற்ப ஆசிரியர்களை உரு வாக்க வேண்டும். அவர்கள் தரத்தை உயர்த்த தனியாக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருது திருவண்ணா மலையைச்சேர்ந்த பிரீத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘கழுத்துக்கு கீழ் எந்த செயல்பாடும் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளிக்கு முதல் தடவையாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு பெருமையாக உள்ளது. என்னைப்போல் முதுகு தண்டு வட பாதிப்பு ஏற்பட்ட ஆண், பெண் கள் நிறையபேர் வீட்டுக்குள் முடங்கியிருப்பார்கள். அவர் களை வீட்டில் உள்ளவர்கள் வார்த்தைகளால் துன்புறுத் துவார்கள். அவர்களுக்காக நான் ‘சோல் ப்ரீ’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி பணியாற்றி வருகிறேன். எல்லோருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம். மாற் றுத்திறனாளி ஒருவர் பள்ளிக் குச் சென்றால், சக்கர நாற்காலி இல்லை, சாய்தளம் இல்லை, மின் தூக்கி இல்லை என்ற நிலை வரக்கூடாது. அதற்கான அடிப்படை கட்ட மைப்பு வசதி களை செய்து தரவேண்டும்’ என்று கூறினார். நல் ஆளுமை விருது முதல்வரின் நல் ஆளுமை விருது பெற்ற வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, ‘வணிக வரித் துறையில், வணிகர்கள் தங் கள் கணக்குகளை சமர்ப் பித்தல், வரி செலுத்துதல், அதில் உள்ள கோரிக்கை களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் கால விரையத்தை போக்கும் வகையில் மொத்த தீர்வு திட் டம் அமல்படுத்தப்பட்டுள் ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார். முதல்வரின் நல் ஆளுமை விருது பெற்ற வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, ‘வணிக வரித் துறையில், வணிகர்கள் தங் கள் கணக்குகளை சமர்ப் பித்தல், வரி செலுத்துதல், அதில் உள்ள கோரிக்கை களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் கால விரையத்தை போக்கும் வகையில் மொத்த தீர்வு திட் டம் அமல்படுத்தப்பட்டுள் ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.