

மோகனூர் காந்தமலை முருகன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மீது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் அப்பெண் தூக்கி வீசப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூ ரைச் சேர்ந்தவர் பேக்கரி கடை உரிமையாளர் ஞானசேகர் (35). இவரது மனைவி பிரியா (30), நேற்று முன்தினம் மாலை மோக னூர் -நாமக்கல் சாலையில் உள்ள வீட்டில் இருந்து பேக்கரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
மோகனூர் காந்தமலை முருகன் கோயில் அருகில் சாலையைக் கடக்க முற்பட்டபோது, அவ்வழி யாக அதிவேகமாக சென்ற கார், பிரியாவின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பிரியா அந்தரத்தில் பறந்தபடி தூக்கி வீசப்பட்டார். இந்தக் காட்சிகள் அங்குள்ள கடை ஒன்றில் வைக்கப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த விபத்துக் காட்சி வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கார் மோதியதில் இளம்பெண் கார்மேல் விழுந்து அந்தரத்தில் பறந்தபடி விழும் காட்சி பார்ப்போ ரின் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. இதனிடையே விபத் தில் படுகாயமடைந்த பிரியா கோவை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவரது உயிருக்கு ஆபத் தில்லை என்றும், விலா எலும்புகள் நொறுங்கியதால், சில தினங்கள் அங்கு அவர் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக மோகனூர் காவல் துறையினர் கூறினர்.
இதனிடையே விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் ஹரிகரனை மோகனூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையை கடக்கும்போது..
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இரு சக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து செல்ல வேண்டும். சிக்கனல் இருக்கும் இடங்களில், சாலையில் வரையப்பட்டுள்ள எல்லைக்கோட்டுக்கு பின் வாக னங்களை நிறுத்த வேண்டும். வாகனங்களை இயக்குவதற்கான சிக்னல் கிடைத்த பின்னரே செல்ல வேண்டும்.
மேலும், சாலையை கடக்கும் சமயத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு, சாலையின் இருபுறமும் கவனமாக பார்த்து விட்டு வாகனங்கள் வராத போதுதான் சாலையை கடக்க வேண்டும்.
அவசர கோலத்தில் சாலையைக் கடக்கக் கூடாது. குறிப்பாக செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவதை கட் டாயம் தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகனங்களுக்கான காப்பீட்டு ரசீது வைத்திருக்க வேண்டும்’’, என்றனர்.