அதிமுக அம்மா கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 29-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருவதாலும், முதல்வர் கே.பழனிசாமி தரப்பில் அமைச்சர்களின் விமர்சனத் தாலும் அதிமுக இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. இருப்பினும் இரு தரப்பிலும் உள்ள முதல்கட்ட தலைவர்கள் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் இல்லை என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை மற்றும் அதிமுக கட்சியின் பெயர் ஆகியவை முடக்கப்பட்டன. அதேபோல், சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட விவகாரமும் தேர்தல் ஆணையத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. கட்சி நிர்வாகிகளின் ஆதரவு தங்கள் பக்கம்தான் அதிகளவில் உள்ளது என்பதற்கான கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க இரு அணியினருக்கும் ஜூன் 16-ம் தேதி வரை, தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஓபிஎஸ் அணி தரப்பில் தற்போது வரை பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல்வர் கே.பழனிசாமி தரப்பு ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், முதல்வர் பழனிசாமி அணியின் அதிமுக அம்மா கட்சியில் உள்ள சில எம்எல்ஏக்கள் தனி அணியாக கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் பதவி கோரிக்கை
சிலர் அமைச்சர் பதவி அளிக்கு மாறு கோரி வருவதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில் எம்எல்ஏக் கள் சிலரும் முதல்வரை சந்தித்து கட்சி, ஆட்சியில் பிரதிநிதித்துவம் தொடர்பாக பேசியுள்ளனர்.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும் என அம்மாவட்ட முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான பச்ச மால் அதிமுக தலைமை அலுவலகத்தில் மனு அளித் துள்ளார். இது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுதல், முதல்வர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் தொடர்பாகவும் கட்சியினரின் கருத்துக்களை கேட்க முதல்வர் கே.பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக அம்மா கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 29-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது.
இக்கூட்டத் தில், எம்எல்ஏக்கள் விவகாரம், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண் டிய ஆவணங்கள் தொடர்பானவை முக்கியமாக விவா திக்கப்பட உள்ள தாக கூறப்படு கிறது.