Published : 06 Aug 2017 10:45 AM
Last Updated : 06 Aug 2017 10:45 AM

மணல் லாரிகளின் ஆவணங்கள் சரிபார்க்க சிறப்பு முகாம்

சென்னை

சென்னையில் மணல் லாரிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்பு முகாம் நாளை தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ஆன்-லைன் மணல் சேவையில் மேற்கொள்ளப் படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளைத் தவிர்க்கும் பொருட்டு வாகன ஆவணங்களை சரிபார்த்தலுக்கான சிறப்பு முகாம் சென்னையில் நடை பெற உள்ளது. இந்த முகாம் வரும் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் வாகனப் பதிவு புத்தக விவரம், வாகன அனுமதிச் சான்று, வாகன தகுதிச்சான்று, சாலைவரி ரசீது மற்றும் காப்பீடு விபரங்கள் ஆகியவற்றின் அசல் சான்றுகள் சரிபார்க்கப்படவுள்ளன. எனவே, முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்க ளுடைய வாகன பதிவுகளை www.tnsand.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நேரடியாக சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு பதிவு செய்துக் கொள்ளவேண்டும். பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x