Published : 07 Aug 2017 10:52 AM
Last Updated : 07 Aug 2017 10:52 AM

சென்னை மாநகராட்சி வீடற்றவர் காப்பகத்தில் நண்பர்கள் தின விழா கொண்டாட்டம்

சென்னை மாநகராட்சி சார்பில் சூளையில் இயங்கி வரும் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்றோருக்கு நட்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி சார்பில் 43 இடங்களில், நகர்ப்புற வீடற்ற வர்களுக்கான காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அவர்களுக்கு 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது. இவற்றை தனியார் தொண்டு நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன. சூளை பகுதியில் இயங்கும் காப்பகத்தை இந்திய சமுதாய நல நிறுவனம் (ஐசிடபிள்யூஓ) பராமரித்து வரு கிறது. அந்நிறுவனம் சார்பில், உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, அந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் 52 முதியோருக்கு, நட்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற் றது.

இது தொடர்பாக அந்நிறு வனத்தின் செயலர் ஏ.ஜெ.அரி ஹரன் கூறியதாவது: இங்கு தங்கியிருப்போர், இறக் கும் வரை இங்கேயே தான் தங்கியிருக்கப் போகின்றனர். அவர்கள், அவர்களுக்குள் ஒரு வருக்கொருவர் நட்பை ஏற்படுத் திக்கொண்டு, அவர்களுக்குள் உதவிகளைச் செய்து கொள்ள வேண்டும். தங்கள் மனதில் தோன்றும் வருத்தங்களை, அவர்கள் தேர்வு செய்யும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவர்களின் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இவை குறித்து அவர்களுக்கு எடுத் துரைத்தோம். அதனைத் தொடர்ந்து, அங்கு அவர்கள் அனை வரும் கேக் வெட்டி, அவர்களின் நண்பர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தனர் என்றார்.

நிகழ்ச்சியில் ஐசிடபிள்யுஓ பொருளாளர் ஆர்.ரவிகுமார், தன்னார்வலர்கள் மருத்துவர் அதிதி, கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உலக நண்பர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை சூளை பகுதியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான காப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x