Published : 23 May 2017 08:53 AM
Last Updated : 23 May 2017 08:53 AM

சசிகலாவை அமைச்சர் சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பம்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சசிகலாவுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எந்தத் தொடர்பும் இல்லை. சசிகலாவை அமைச்சர் சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பமாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஒரே நாடு, ஒரே வரி என்ற அடிப் படையின் கீழ் நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பு இருக்க வேண்டும் என்ற அடிப் படையில் ஜிஎஸ்டி கவுன்சில் உரு வாக்கப்பட்டுள்ளது. இதில், எல்லா மாநிலங்களின் நிதி அமைச்சர் களும் உறுப்பினர்களாக இருப்பார் கள். அதன் அடிப்படையில் டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் என்ற முறையில் நான் கலந்துகொண்டேன். கூட்டத்தில், 85 சதவீத பொருட்கள் மீதான வரி விதிப்பு நிறைவேறியது. இன்னும் 15 சதவீத பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்து ஜூன் 3-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் கொடுத்த கோரிக்கை களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட் டுள்ளன. ஜி.எஸ்.டி-க்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹோட்டல்கள் மூடப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வரி விதிப்பு இன்னும் முழுமையாக முடி வடையவில்லை. ஜி.எஸ்.டி-யில் 300 வகையான உணவுப் பொருட் களுக்கு வரி விலக்கு அறிவிக் கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முடிந்தவரை எல்லோருடைய நலனையும் பாதுகாக்கும் வகையில் மாநில அரசு சார்பில் அழுத்தம் தருகிறோம். ‘நீட்’ போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்துகொள்ள பள்ளிக் கல்வித் துறையில் மாற்றம் என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.

அதிமுக இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கு ஓ.பி.எஸ். அணியினர்தான் நிபந்தனை விதிக்கிறார்கள். அந்த அணியில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி கருத்து கூறி வருகிறார்கள். அது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது. எங்களைப் பொருத்தவரை நாளை அவர்கள் பேச வந்தாலும்கூட நாங்கள் தயார். இனி காலத்தின் சூழ்நிலை இரு அணிகளும் இணைந்து செயல்படுவதுதான். அவர்கள் வைக்கும் கோரிக்கை ஜெயலலிதா மரணம் பற்றியது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதற்கான தீர்வு இருக்கும்.

சசிகலாவை அமைச்சர் சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பம். கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கட்சிரீதியாக யாரும் அவரை சந்திக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யார் வேண்டுமென்றாலும் கட்சியை நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x